சிறுகதை

கனவு ஆசி­ரி­யர் | கரூர் அ.செல்­வரா­ஜ்

பொரு­ளா­தாரத்தில் மிகவும் பின் தங்­கிய மக்கள் வசிக்­கும் கிரா­மப்­புற அரசு மேல்­நி­லைப்­பள்ளி அது.

அந்தப் பள்­ளியில் 12 ம் வகுப்பு படித்து நல்ல மதிப்பெண்களுடன் பாஸ் செய்த ஏழை மாண­வர்கள் ரவிச்­சந்­திரன், ஜெயக்­குமார் ஆகியோர் நெருங்­கிய நண்­பர்­கள்.

ரவிச்­சந்­திரன் வாழை ஆராய்ச்சி நிறு­வ­னத்தில் அதி­கா­ரி­யா­கவும் ஜெயக்­குமார் தனியார் மருத்­துவக் கல்­லூ­ரியில் இளம் மருத்­து­வ­ரா­கவும் பணி­யாற்றி வரு­கின்­ற­னர்.

அரசு விடு­முறை நாள் ஒன்றின் காலையில் ரவிச்­சந்­திரன் ஜெயக்­குமாருக்குத் தனது செல்­பே­சியில் பேசி­னான்.

‘ஹ­லோ ! ஜெயக்­கு­மாரா? நான் ரவி பேச­றேன்­’

‘ர­வி நல்லா இருக்­கியா…? நானே உங்­கிட்டப் பேச­லாம்னு நினைச்­சிட்­டி­ருந்தேன். நீ முந்­திட்டே… சரிப்பா ரவி… என்ன விஷயம்? ஏதா­வது அவ­ச­ர­மான விஷ­ய­மா…?’

‘ஜெ­யா செப்­டம்பர் 5 ம் தேதி­யிலே என்ன விசே­ஷம்னு தெரி­யு­மா…?

‘ர­வி அது மறக்க முடி­யாத நாள் ஆச்சே… செப்­டம்பர் 5 ம் தேதி ஆசிரியர் தினம். அதுவும் நம்ம பள்ளி ‘க­னவு ஆசி­ரி­யர்’ செல்­வக்­குமார் மற்றும் அனைத்துப் பாட ஆசி­ரி­யர்­களும் நமக்கு செய்த கல்விச் சேவையை நினைச்சு சந்­தோ­ஷப்­பட்டு வாழ்த்தும் பாராட்டும் சொல்­ல வேண்­டிய நல்ல நாள் ஆச்சே. மறக்க முடி­யு­மா?’’

‘ஜெ­யா இந்தக் கொரோனா காலத்­திலே ஆசி­ரியர் தினம் கொண்­டாட்டம் நடத்­துறதுக்குப் பள்­ளிக்­கூடம் திறந்து இருக்­குமா? மாண­வர்கள் வரு­வாங்­க­ளான்னு சந்­தேகம் இருக்­கு­து­’’

‘ர­வி நல்­ல­தையே நினைப்போம். நல்­ல­தையே செய்வோம். நல்­லது நடக்கும். நம்ம பள்ளி உயி­ரியல் ஆசி­ரியர் செல்­வக்­குமார் நமக்கு மட்­டு­மல்ல நம்ம ஊருக்கே ‘க­னவு ஆசி­ரி­யர்’. அவர் இந்த வருஷம் வேலை­யி­லி­ருந்து ஓய்வு பெறப் போறாரு. அவ­ருக்கு நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து நல்­லதா ஒரு நினைவுப் பரிசு தரணும். அதுக்­கான செலவு சுமார் 25 ஆயிரம் இருக்­கலாம். அந்த நினைவுப் பரி­சைக் கூட நம்ம கனவு ஆசி­ரியர் வேண்­டாம்னு சொல்­வாரு. அதுக்காக இன்­னொரு திட்­டமும் வச்­சி­ருக்­கேன்­’.

‘ஜெ­யா அது என்ன திட்­டம்?’

‘ர­வி நம்ம கனவு ஆசி­ரியர் செல்­வக்­கு­மாரின் அன்பும் ஆத­ரவும் பண உத­வியும் இல்­லன்னா நம்ம ரெண்டு பேரும் இந்த நிலைக்கு வந்­தி­ருக்க முடி­யாது. படிப்­பிலும் அறி­வியல் கண்­காட்சிப் போட்­டி­க­ளிலும் நம்ம நல்ல பேரும் புகழும் அடை­ஞ்­ச­துக்கு அவர் தான் காரணம். அதுக்­காக அவ­ருக்கு மதிப்பு மிகுந்த நினைவுப் பரிசு கட்­டாயம் தரணும். அதோடு கூட கம்ப்­யூட்­டரும் நவீன வச­திகள் கொண்ட ஒரு லேசர் பிரிண்­டரும் வாங்கித் தரணும். பிரிண்­ட­ரி­லேயே ஜெராக்ஸ் எடுக்­கிற வச­தியும் ஸ்கேன் பண்­ணற வச­தியும் இருக்­கி­ற­தாலே ஆபீ­சுக்கு மட்­டு­மில்­லாமல் மாணவ – மாண­வி­க­ளுக்கும் பய­னுள்­ள­தாக இருக்­கும் . எப்­படி என் திட்­டம்?’’

‘ஜெ­யா நம்ம கனவு ஆசிரியர் செல்­வக்­குமார் நம்ம பள்ளி வளர்ச்­சிக்­கா­கவே பாடு­ப­டு­பவர். அவரை இந்த திட்­டத்­துக்கு சம்­ம­திக்க செய்ய வேண்­டி­யது நம்ம பொறுப்பு. செல்­போன்லே பேசி சம்­மதம் வாங்­கணும். திட்­டத்தை வெற்­றி­க­ரமா நிறை­வேத்­தணும்… சரி­யா’’ இந்த ரெண்டு திட்­டத்­துக்கும் அதிக பட்சம் 60 ஆயிரம் ஆகலாம். இதை ரெண்டு பேரும் சரி­ச­மமா செலவு செய்வோம். மத்த விஷ­யங்­களைப் பத்தி அடிக்­கடி பேசறேன். சரிப்பா நேரம் ஆகுது. செயல்லே இறங்­கு­’’

‘ர­வி! கனவு ஆசி­ரி­ய­ரையும் கனவை நன­வாக்­கிய பள்­ளி­யையும் பெரு­மைப்­ப­டுத்தும் நாளில் நேரில் சந்­திக்கக் காத்­தி­ருப்­போம்­’’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *