செய்திகள்

கனமழை எதிரொலி: உ.பி.யில் மின்னல் தாக்கி 13 பேர் பலி; டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை

டெல்லி, செப். 23–

வட மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் டெல்லி, உத்தரப் பிரதேசத்தில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் 10 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குர்கானில் தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மின்னல் தாக்கி 13 பேர் உயிரிழந்தனர். 11 பேர் படுகாயமடைந்தனர்.

டெல்லியிலும் மழை

டெல்லியில் நேற்று காலை 8.30 மணி தொடங்கி மாலை 5.30 மணி வரை 31.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் டெல்லியில் பல்வேறு சாலைகளிலும் மழை நீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் டெல்லியில் இன்று காலை 8 மணி தொடங்கி 2 மணி நேரத்திற்கும் மேலாக தெற்கு டெல்லி, தென் கிழக்கு டெல்லி காசியாபாத், இந்திராபுரம், நொய்டா, தாத்ரி, குருகிராம், ஃபரிதாபாத், ஆல்வார் ஆகிய பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. டெல்லியில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கலாம் என்பதால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு பருவமழை நிறைவு பெறும் சூழலில் இந்த மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.