செய்திகள்

கனமழை எச்சரிக்கை: சென்னை உட்பட பல்வேறு நகரங்களிலிருந்து ஆந்திரா, ஒடிசா செல்லும் 144 ரெயில்கள் ரத்து

சென்னை, நவ. 3–

மிக்ஜம் புயல் காரணமாக கனமழை எச்சரிக்கையால் சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து ஆந்திரா, ஒடிசா வழியாகச் செல்லும் 144 விரைவு ரெயில்கள் இன்று முதல் 7–ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை சென்டிரலில் இருந்து இன்றும், நாளையும் டெல்லிக்கு செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12621), மறுமார்க்கமாக டெல்லியில் இருந்து சென்டிரலுக்கு 5, 6-ந்தேதிகளில் இயக்கப்படும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் (12622), சென்னை சென்டிரலில் இருந்து ஆமதாபாத்துக்கு இன்று முதல் 5ந்தேதி வரை இயக்கப்படும் நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (12656), மறுமார்க்கமாக ஆமதாபாத்தில் இருந்து சென்னை சென்டிரலுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் 6ந்தேதி வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12655), சென்னை சென்டிரலில் இருந்து சாப்ராவுக்கு நாளை இயக்கப்படும் கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் (12669), சென்னை சென்டிரலில் இருந்து விஜயவாடாவுக்கு இன்று முதல் 5ந்தேதி வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12712) ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்டிரலில் இருந்து விஜயவாடாவுக்கு இன்று மற்றும் நாளை (4-ந்தேதி) செல்லும் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் (12077), மறுமார்க்கமாக விஜயவாடாவில் இருந்து சென்னை சென்டிரலுக்கு அதே தேதிகளில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12078), சென்னை சென்டிரலில் இருந்து டெல்லி ஹசரத்துக்கு நாளை செல்லும் நிஜாமுதின் எக்ஸ்பிரஸ் (12269), கயாவில் இருந்து சென்னை சென்டிரலுக்கு இன்று இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (12389), சென்னை சென்டிரலில் இருந்து கயாவுக்கு வரும் 5-ந்தேதி இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (12390) ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல, சென்னை சென்டிரலில் இருந்து ஐதராபாத்துக்கு இன்று முதல் 5-ந்தேதி வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12603) ரத்து செய்யப்படுகிறது.

மேலும், தாம்பரத்தில் இருந்து ஐதராபாத்துக்கு நாளை மற்றும் 5-ந்தேதிகளில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12759), ஐதராபாத்தில் இருந்து தாம்பரத்துக்கு இன்றும், நாளையும் இயக்கப்படும் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயில் (12760), சென்னை சென்டிரலில் இருந்து ஹவுராவுக்கு நாளை முதல் 6-ந்தேதி வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12840), சென்னை சென்டிரலில் இருந்து ஜெய்ப்பூருக்கு 5-ந்தேதி இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12967) ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்டிரலில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு 5-ந்தேதி இயக்கப்படும் அதிவிரைவு ரெயில் (22870) உள்பட 144 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

இதுபோக, லக்னோவில் இருந்து சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16094), காத்ராவில் இருந்து நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16788), பாட்னாவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22644) சேவைகள் 7-ந்தேதி மட்டும் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

3 விமானங்கள் ரத்து

மிக்ஜாம் புயல் எதிரொலியாக 3 விமானங்கள் ரத்து செயப்பட்டுள்ளன.

மும்மை, ஐதராபாத் செல்ல இருந்த 2 விமானங்களும், மும்பையில் இருந்து சென்னை வரவிருந்த ஒரு விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், சென்னையில் இருந்த புறப்படவிருந்த 9 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *