செய்திகள் போஸ்டர் செய்தி

கனடாவில் பயணிகள் மின் விமான சோதனை வெற்றி

Spread the love

வான்கூவர், டிச. 11–
உலகின் முழுமுதல் மின்சார வணிக வாகனப் போக்குவரத்து கனடாவின் வான்கூவர் நகரில் இருந்து சோதனை ஓட்டம் செய்யப்பட்டது.
கனடாவின் உயரிய மாலைசூழ்ந்த வான்கூவர் நகரில் இருந்து, பசிபிக் கடலின் எல்லை வரையில் இயக்கப்பட்ட இந்த மின்சார வணிக விமானத்தை, ‘ஹார்பர் ஏர்’ நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான கிரீக் மிக்டாகல் என்ற விமானி இயக்கினார். மின்சார உதயத்துக்கு பிறகு, 100 பார்வையாளர்கள் மத்தியில் 15 நிமிடங்களுக்கு குறைவாக வெற்றிகரமாக இயக்கப்பட்ட இந்த விமானத்தில், 6 பயணிகளும் பறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மின்விமானத்தின் காலம்
இது குறித்து சியாட்டில் நகரை மையமாக கொண்ட பொறியியல் நிறுவனமான மாக்னிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ரோய் கன்சார்ஸ்கி கூறியதாவது:–
மின்சார வணிக விமான போக்குவரத்து, அனைத்து நிலைகளிலும் சாத்தியம் என்பதை, இந்த வெற்றி காட்டுகிறது. எங்கள் நிறுவனம், இந்த மின்சார விமானத்தின் மோட்டாரை வடிவமைத்து, ஹார்பர் ஏர் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி உள்ளது. ‘ஹார்பர் ஏர்’ நிறுவனம், வான்கூவரிலிருந்து ஆண்டுக்கு 5 லட்சம் பயணிகளை விஸ்ட்லர் ஸ்கை ரிசார்ட் மற்றும் அருகில் உள்ள தீவுகளுக்கும் கடலோர பகுதியில் வசிப்பவர்களை கொண்டு சேர்க்கிறது.
மின்சார வணிக விமான தொழில்நுட்பம் மூலம், விமான நிறுவனங்களின் செலவு கணிசமாக குறையும். மேலும், இந்த வெற்றிகரமான பயணம் என்பது, இது மின்சார விமான போக்குவரத்து கால தொடக்கத்தின் அறிகுறியாக பார்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறும்போது, கார்பன் வெளியேற்றத்தில் சிவில் விமானப் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது என்றுதான் கூற வேண்டும். ஏனெனில், தரைவழிப் போக்குவரத்தை விடுத்து, வான் வழி போக்குவரத்து மற்றும் மாற்றுத் தொழில் நுட்பங்களை நாடும் மக்கள் அதிகரித்து வருவதால் இந்த நிலை ஏற்படுகிறது.
பன்னாட்டு சிவில் விமானப் போக்குவரத்து கழகம், வான்வெளி போக்குவரத்தில், உயிரி எரிபொருளை பயன்படுத்துவதையும் எடை குறைந்த மூலப்பொருள்களை பயன்படுத்துவதையும் அத்துடன் பாதை தேர்வையும் கூட வலியுறுத்தி வருகிறது என்று கூறினார்.
எரிபொருள் சேமிப்பு
மின்சார விமானத்தை இயக்கியது குறித்து கிரீக் மெக்டாகல் கூறியதாவது:–
என்னைப் பொருத்தவரை நீர்நாய் ஒன்று பறந்தது போன்று இருந்தது. ஆனால், மின்சார ஊக்க மருந்தை பயன்படுத்திய நீர்நாய் என்று கூறலாம் என்று கூறினார். மேலும் அவர் கூறும்போது, எங்கள் போக்குவரத்து முழுவதையும் மின்சாரமயமாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம், வேறு காரணங்கள் ஏதும் இல்லை.
மேலும், எரிபொருள் சேமிப்பும் குறைந்த பராமரிப்பு செலவு என்பதும் தற்போதைய தேவையாக இருக்கிறது. அதனை இது சாத்தியப்படுத்தும். நாங்கள் இதுபோன்ற 40 கடல்விமானங்களை உருவாக்க, குறைந்தது 2 ஆண்டுகள் ஆகும் என்றும் குறிப்பிட்ட அவர், அத்துடன், ஒழுங்கு முறை ஆணையத்தால் மின் மோட்டார்கள் அங்கீகரிக்கப்படுவதும் முக்கியம் என்று கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *