செய்திகள்

கண்டெய்னர் லாரி மீது பஸ் உரசியதால் படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி

Makkal Kural Official

மதுராந்தகம், மார்ச் 12–

மதுராந்தகம் அருகே கண்டெய்னர் லாரி மீது பஸ் உரசியதால் படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுராந்தகம் அருகே தனியார் பேருந்தில் கன்டெய்னர் லாரி உரசி விபத்துக்குள்ளானதில் பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேட்டில் இருந்து அச்சரப்பாக்கம் வழியாக மதுராந்தகம் நோக்கி பயணிகளை ஏற்றி கொண்டு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது மேல்மருவத்தூர் அருகே சிறுநாகலூர் என்ற இடத்தில் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்த கண்டெய்னர் லாரி மீது பஸ் பக்கவாட்டில் உரசியதில், படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் தவறி விழுந்தனர்.

இந்த கோர விபத்தில் 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஒரு கல்லூரி மாணவர் ரஞ்சித் பலத்த காயத்துடன் மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்த மூவரும் மதுராந்தகத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று வந்த கமலேஷ், தனுஷ், மோனிஷ் என்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *