சினிமா செய்திகள்

கணேஷ் குமாரின் ‘சிம்பொனி’ இசை ஆல்பம்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து

சென்னை, ஜூன்.29–

சென்னை இசையமைப்பாளர் கணேஷ் பி.குமார் தயாரித்த ‘சிம்பொனி’ கவிதை என்னும் வடிவில் இந்தியாவிலேயே புதிய இசை ஆல்பம் வெளியிட்டதை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டி உள்ளார்.

இந்த கவிதை ஆல்பத்தில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் குறிப்பிட்ட புறநானூறு பாடலும் இடம் பெற்றுள்ளது.

கணேஷ் வெளியிட்டுள்ள ‘மனிதநேய உணர்வு’ சிம்பொனி இசை ஆல்பத்தில் உள்ள ‘பயணம்’ என்னும் சிம்பொனி கவிதை பகுதி வெகுவாக கவர்ந்தது. ‘சிம்பொனிக் போயம்’ என்னும் இசை வடிவை உருவாக்கிய முதல் இந்தியன் என்று கணேஷ் குமாரை நிர்மலா சீதாராமன் பாராட்டினார்.

அமெரிக்க பார்மா ரெக்கார்ட்ஸ் நிறுவனம், இந்த இசை ஆல்பத்தை நவொனா ரிக்காரட்ஸ் என வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *