செய்திகள்

கட்டுப்பாட்டு தளர்வுகளால் இயல்பு நிலைக்கு திரும்பும் பிரான்ஸ்

பாரீஸ்,மே 21–

பிரான்ஸ் நாட்டில் கொரோனா பாதிப்புகள் வெகுவாக குறைந்துள்ளதால், அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் வெகுவாக தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ளது.

பிரான்சில் 30 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், அங்கு கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மூன்றாவது முறையாக ஊரடங்கு கட்டுபாடுகள், நேற்று முன் தினம் தளர்த்தப்பட்டது.

தியேட்டர்கள், உணவு விடுதிகள், அத்தியாவசியப் பொருட்கள் அல்லாத இதர கடைகளும் திறக்கப்பட்டன.

தெற்கு பிரான்சில் உள்ள புகழ்பெற்ற நைஸ் நகரின் கடற்கரை விடுதி ஒன்றில் திறந்தவெளி மேஜைகளில் அமர்ந்து சுற்றுலா பயணிகள் அரிய வகை வைன்களை குடித்து மகிழ்கின்றனர்.

பாரிஸ் நகருக்கு வெளியே உள்ள லே வின்சென்னே திரையரங்கு திறக்கப்பட்டவுடன் நேற்று முன் தினம் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல்காக ஓடியது. சமூக இடைவெளி காரணமாக 35 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது. திரையரங்குகளில் ஜூன் 9 முதல் 65 சதவீதமும், ஜூன் 30 முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதியளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *