சோமசுந்தரம் ஒரு அரசாங்க கடை நிலை ஊழியர். அவனுக்கும் சுலோச்சனா என்ற பொண்ணுக்கும் திருமணம் நடந்தேறியது. கிராமத்து பெண்தான். சற்று வசதியான குடும்பம்தான்.
திருமணமான உடனே மைலாப்பூரில் குடித்தனம் செய்ய வந்து விட்டார்கள். அவனுடைய சம்பளத்தில் ஒரு ஒண்டுக் குடித்தனத்தில் வாடகை வீட்டில் குடி புகுந்தார்கள். அந்த வாழ்க்கைக்கு சுலோச்சனா முதலில் சிரமப்பட்டாள். அவனுக்கு சொந்தமாக வீடு வாங்கி கைகால்களை நீட்டி வீசி நடக்கும்படி வீடு கட்ட வேண்டும் என்பது அவளுடைய கனவு.
சிவக்குமார், சிவப்பிரியா என்ற இரு குழந்தைகள் பிறந்தார்கள். இருவரையும் அதே பகுதியில் இருந்த அரசாங்கப்பள்ளியில் சேர்த்தார்கள். ஒரு கோவிலிலிருந்த இலவச பாட்டுக் கிளாஸில் சிவப்பிரியா படித்தாள். சிவக்குமார் பள்ளியில் ஒரு கிரிக்கெட் டீமில் சேர்த்துக் கொள்ளப்பட்டான். இந்த சூழ்நிலையில் வீடு கட்டுவது என்பது நினைக்கக் கூட முடியாது.
ஆனால் மகன் தனக்கொரு அறை தனியாக வேண்டும் என்றான். மகளும் தனக்கும் ஒரு தனி அறை வேண்டும் என்றாள். சோம சுந்தரம் அதற்கென்ன கட்டும்போது அதற்கு வசதி செய்து தருகிறேன் என்றான். காலி மனை வாங்கிய இடம் பாலவாக்கம் என்ற காட்டுப் பகுதியாக இருந்தது.
சுலோச்சனா வீட்டில் பழ மரங்கள் வளர்க்க வேண்டும் என்றாள். முதலில் மனையைச் சுற்றி வேலி போட்டான். சுவையான பலாச்சுளையின் கொட்டைகள் சிலவும் மாம்பழக் கொட்டைகள் சிலவும் சப்போட்டா விதைகள் சிலவும் சேகரித்து வைத்திருந்தாள். சோம சுந்தரம் அவற்றை தன் மனையைச் சுற்றி விதைத்து விட்டு வந்தான். சைக்கிளில் போனால் இரண்டுமணி நேரம் கடந்தது. சுலோச்சனா வீட்டிற்கு சிவசக்தி என்று பெயரிட நினைத்தான். ஊருக்குப் போன போது ஒரு ஊஞ்சல் செய்ய வேண்டும் என்பது அவளின் கனவாக இருந்ததால் ஆசாரியை வைத்து பலா மரத்தில் செய்யச் சொல்லி வரவழைத்தும் விட்டாள். ஒரு பீரோவில் துணியைச் சுற்றி வைத்து விட்டாள்.
வீடு கட்டும் வசதி சோம சுந்தரத்திற்கு வரவில்லை. சில மாதங்கள் கழித்து மனையைப் பார்த்து விட்டு வந்தான். மா, பலா, சப்போட்டாக்கள் வளர ஆரம்பித்திருந்தன. அப்போது இருந்த வீடும் அடிக்கடி மாற்ற வேண்டியது இருந்தது. ஒவ்வொரு வீட்டின் அமைப்பும் சுலோச்சனாவைக் கவர்ந்தன. அதன்படி சுலோச்சனாவும் பிளான் பண்ணினாள். கனவுகள் மட்டும் தொடர்ந்தன.
ஒரு தடவை தன் அண்ணன் மகள் பிரியாவின் மஞ்சள் நீராட்டு விழாவிற்குச் சென்று வந்தனர். திரும்பி வந்ததும் சிவப்பிரியாவும் மாமன் மகளின் அலங்காரத்தை சோம சுந்தரத்திடம் விவரித்தாள். தலைமுடி கொள்ளாமல் பூ அலங்காரத்தைப் புகழ்ந்தாள். நெய்யில் மிதந்த கேசரியைப் புகழ்ந்தாள். மேலும் பிரியாணியும் மிகவும் சுவையாக இருந்ததாகச் சொன்னாள். சோம சுந்தரமும் இதை சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டான். அத்துடன் இதுபோல நாமும் அல்லவா செய்ய வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
ஒரு நாள் அந்த சுப நிகழ்ச்சியும் அவனுடைய வீட்டில் நடந்தது. சோம சுந்தரமும் தன் சக்திக்கு மீறி செலவு செய்தான். கையிருப்பும் குறைந்தது. ஆனாலும் ஏனோ ஒரு மனநிறைவு சுலோச்சனாவுக்கும் சோம சுந்தரத்திற்கும் ஏற்பட்டது.
சிவகுமாரும் +2 முடித்து விட்டான். நல்ல மார்க்கும் இருந்ததால் ஒரு கவர்ன்மென்ட் இன்ஜினீயரிங் காலேஜில் இலகுவாக இடம் கிடைத்தது.பணம் எப்படியோ சமாளித்தும் விட்டான். சில வருடங்களில் சிவப்பிரியாவுக்கும் காலேஜ் சேர வேண்டிய கட்டம் வந்தது.
சோம சுந்தரமும் இன்னும் இரண்டு வருடங்கள்தான் பணிசெய்யமுடியும். அதன் பிறகு ரிடையர் மெண்ட் என்ற நிலை ஏற்பட்டது. சோமசுந்தரத்தால் வி.ஆர்.எஸ்., வாங்கி வீட்டைகட்டி முடித்துவிடலாம் என்று சுலோச்சனா யோசனை சொன்னாள். ஆனால் சோம சுந்தரத்திற்கு அது சரியாகப் படவில்லை. பணிக்குப் பின் நமக்கு சிறு கீரை பாத்திபோல் சிறுசிறு பணம் நமக்கு கைக்கு வந்து சேரும். பென்சன் நமக்கு கைச் செலவுக்கு வரும் என்று சொல்லி விட்டான். சுலோச்சனாவும் ரிட்டையர்மெண்ட் வருமுன் இரண்டு பட்டுச் சேலை வாங்கி விடவேண்டும் கோ ஆப் டெக்ஸில் என்று ஆசைப்பட்டாள். தவணை முறையில் மகளுக்கும் ஒரு பட்டுசேலை வாங்கினாள். சம்பளப் பிடிப்பு அதிலேயே வாங்கினாள். சம்பளப் பிடிப்பு அதிலேயே பாதி போய் விட்டது.
கனவு இல்லம் நனவுக்கு வரவில்லை. திடீரென ஒரு நாள் நிலத்தின் தற்போதைய விலையை விசாரித்தான். தற்போதையவிலை 5 லட்சம் என்று அவன் மனை விலை என்று சொன்னார்கள். மனதிற்குள் அந்த விலை உற்சாகத்தைக் கொடுத்தது.
மகன் சிவக்குமாருக்கு நல்ல கம்பெனியில் வேலை கிடைத்தது. மகளுக்கும் எதிர்பாராதவிதமாக நல்ல வரன் வரவே சிவப்பிரியாவிற்கும் மணம் முடித்து விட்டான். சுலோச்சனாவும் வீடு கட்டியிருந்தால் மாப்பிள்ளை, பெண்ணும் வந்தால் தங்கிக் கொள்ளலாமே என்று மனத்தில் நினைத்துக் கொண்டாள்.
சிவக்குமாரும் அவனுடன் வேலை பார்த்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்தும் கொண்டான். அவன் ஒரு வீடு வாங்கத் தீர்மானித்தான். சொந்த மனையின் விலை தற்போது 5 கோடியாக மாறியது. இந்த இடத்திலேயே வீடு கட்டிக் கொள்ளலாம் என்று நினைத்தான். அவன் தற்செயலாக சோம சுந்தரம் ஒரு காண்டிராக்டரை அணுகினான்.
ஜாயின் வென்ஷரி (Joint Venture)ல் கட்டினான். தனக்கும் இரண்டு Plot கிடைக்குமே என்று நினைத்தான். சில நாட்களில் அந்த கான்டிராக்டர் சொன்னார். இது கடல் எல்லையிலிருந்து அந்தப் பகுதி ஒரு பணக்காரர்கள் வாழும் பகுதியாக மாறியது. மேலும் உங்கள் மனை கடலிலிருந்த 250 அடி தூரத்தில் உள்ளது. 300 அடிக்கு மேலிருந்தால்தான் பட்டா கிடைக்கும் என்று கூறி மனையை வாங்க மறுத்துவிட்டனர்.
அதற்குள் 60ம் கல்யாணமும் முடிந்து பீமரத சாந்தி (70 வது திருமணமும்) முடிந்து விட்டது. சதாபிஷேகத்தை நம் சொந்த வீட்டில் கொண்டாடிவிடலாம் என்று மகன் சொன்னான். பேரன், பேத்திகளுமே வந்து விட்டனர். வீட்டு மருமகள் அவளுடைய இஷ்டப்படி பிளான் போட்டாள்.
சில மாங்காய்களை மட்டுமே சோம சுந்தரம் கீழே விழந்து கிடந்து மாம்பழங்களை மட்டுமே அவன் எடுத்து வந்து சுலோச்சனாவிடம் கொடுத்தான். தன்னால் இவைகளை மட்டுமே சுவைக்க முடியும் என்று நினைத்துக் கொண்டாள்.
பில்டர் எல்லா மரங்களையும் வெட்டினால் தான் வீடு அஸ்தி வாரம் தாங்கும் என்றார். எல்லா மரங்களும் வெட்டப்பட்டன. வீட்டின் புதுமனை புகு விழா நடக்கவும் ஏற்பாடாகி விட்டது.
வீட்டின் பெயரும் மாற்றப் பட்டது. பேரன், பேத்திகள் புடை சூழ கட்டிய வீட்டிற்கு நுழைந்தார்கள. சுலோச்சனாவும் சோம சுந்தரமும்
வாசற்படியின் முன் சற்று சகதியாக இருந்தாலும் அவளின் மர ஊஞ்சள் நடந்து வர வசதியாகப் போடப்பட்டிருந்தது. மனம் கொஞ்சம் தடுமாறியது. உள்ளே மூங்கில் ஊஞ்சல் 6 சங்கிலியில் தொங்கியது. காலம் மாறும் நாமும் மாற வேண்டியதுான் என்று தன் மனதை சமாதானப் படுத்திக் கொண்டாள். கல்யாணத்தின் போது வாங்கிய மனை சதாபிஷேகத்திற்கு வீடாக மாறியது.
கட்டிய மனைவியுடன் கட்டிய வீட்டிற்கு குடியேறினார்கள் பாட்டியும் தாத்தாவுமாக.
#சிறுகதை