சிறுகதை

கட்டம் – ராஜா செல்லமுத்து

தன் மகன் கபிலன் எவ்வளவு படித்திருக்கிறான். ஆனால் அவன் படித்த படிப்புக்கு சரியான வேலை அமையவில்லை. எத்தனையோ தேர்வுகள் எழுதினான்; தேர்ச்சி பெற்றான் . ஆனால் அவன் நினைத்த வேலை கிடைக்கவில்லை. உயர்ந்த இடத்தில் இல்லை. சின்னச் சின்ன வேலைகளில் அமர்ந்து வேலை செய்வதற்கு அவன் மனது ஒத்துக் கொள்ளவில்லை.

அவனின் நிலையை பார்த்த அப்பா கபிலனின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு நேராக ஜோசியரை சந்தித்தார்

ஐயா இது என் பையன் கபிலைன் ஜாதகம் . இந்த மாவட்டத்திலேயே நீங்கதான் பெரிய ஜோசியர். நீங்க சொன்னா எல்லாம் பலிக்கும் என்று சொன்னாங்க .இந்த ஜாதகத்தை கொஞ்சம் பாருங்க என்று கபிலனின் அப்பா ஜாதகத்தை நீட்டினார். ஜாதகத்தை திருப்பி திருப்பி பார்த்த ஜோதிடர் தன் நெற்றியை மேலே சுருக்கிக் கொண்டு கட்டங்களை ஆராய ஆரம்பித்தார்.

இந்த ஜாதகக் கட்டத்தைப் பார்த்தா தம்பி ,இவ்வளவு படிச்சதே பெரிய விஷயம் . நிச்சயமா இந்த ஜாதகக் கட்டத்துக்கு படிப்பு வராது. அப்படியே படித்தாலும் சரியான வேலை கிடைக்காது. அவர் படித்த படிப்புக்கு தகுதியான இடம் இருக்காது . அப்படின்னு இந்த சாதக சொல்லுது என்று வாயில் வந்ததை போட்டு வைத்தான், இன்னும் எதையோ சொல்லிக்கொண்டிருந்தார் ஜோசியக்காரன்

ஜோசியம் சொல்வதை அப்படியே ஆமோதித்தார் அப்பா.

நீங்க சொல்றது எல்லாமே உண்மை தான். என் பையன் நிறைய படிச்சி இருக்கான்; அவனுக்கான இடம் கிடைக்கவில்லை . அதை அப்படியே புட்டு புட்டு வைத்து இருங்கிறீங்களே. நீங்க ஜோசியர் இல்ல. சாமி என்று படாரென காலில் விழுந்தார்.

அந்த ஜோதிடரை ஒரு கடவுளாகவே பாவித்தார் கபிலனின் அப்பா.

கபிலன் அப்பாவிற்கு ஜோதிடத்தின் மீது அலாதியான ஈடுபாடு இருக்கிறது என்பது கபிலனுக்கு தெரியும் . ஆனால் அதை அவன் ஒருபோதும் தவறாக புரிந்து கொண்டதில்லை

ஆனால் இன்று கூட தன் அப்பா தன் ஜாதகத்தை எடுத்துப் போய் இருப்பார் என்பது அவனுக்கு தெரியாது.

அத்தனையும் கேட்டு வந்த அப்பா கபிலனிடம் எதுவும் சொல்ல வில்லை. மனதுக்குள்ளே வைத்துக் கொண்டிருந்தார்.

தன் மகனுக்கு வாய்த்தது அவ்வளவுதான் . அவன் பிறந்த ஜாதக கட்டம் சரியில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

அதிலிருந்து மகன் எது செய்தாலும் அவன் ஜாதகம் சரியில்லை . கட்டம் சரியில்லை; அவனுக்கு வாய்ப்பில்ல . அவ்வளவுதான் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

ஆனால் இதையெல்லாம் கணக்கில் சேர்த்துக் கொள்ள மாட்டான் கபிலன். தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருந்தான்.ஒரு கட்டத்தில் தன் விடாமுயற்சியால் தான் இடத்தை அடைந்தான்.

அப்போது அந்த ஜோதிடக்காரன் மீது கடுமையான கோபம் வந்தது கபிலன் அப்பாவிற்கு

அந்த ஜோசியர் சொன்னது கபிலன் அப்பாவின் மூளையை துளைத்தது.

உங்கள் மகன் ஜாதகப்படி பார்த்தா பெரிய இடத்துக்கு போவதற்கான கட்டம் சரியில்லை. கடைசி வரைக்கும் அதே நிலை தான் உங்களுடைய மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள். இவ்வளவு தான் வாழ்க்கை என்று சொன்னது ஞாபகத்திற்கு வர அந்த ஜோசியரைக் கொலைவெறியோடு நினைத்தார்.

தன் மகன் உயர்ந்த இடத்திற்கு போனதை உச்சிமோந்த அப்பா

அவனுடைய ஜாதகத்தை கிழித்து தூர எறிந்தார். அதிலிருந்து அவர் எந்த ஜாதகத்தையும் பார்ப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தார்

அன்றிலிருந்து ஜாதகம் என்பது வேப்பங்காயாய் கசந்தது

இன்று அந்த ஜோதிடர் சொன்னதை முறியடித்து, உயர்ந்த பதவியில் மக்கள் மரியாதையோடு மகன் இருப்பதைப் பார்த்த அப்பா எல்லா செயலும் ஜாதகக் கட்டத்தில் இல்லை ; நம் உழைப்பில்தான் இருக்கிறது என்ற முடிவுக்கு வந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *