சிறுகதை

கடுஞ்சொல் பேசாதே | துரை. சக்திவேல்

ஆத்திச்சூடி நீதி கதைகள் – 15

வெட்டெனப் பேசேல்

(விளக்கம்: யாருடனும் கத்தி வெட்டுப் போலக் கடினமாக பேசாதே)

* * *

 

ராஜனும் மதியும் மருந்து நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதிகளாக வேலை பார்த்தனர்.

அந்த நிறுவனத்தின் மேலாளர் அஸ்வின்.

அவருக்கு கீழ் ராஜன், மதி உள்பட 5 விற்பனை பிரதிநிதிகள் வேலை செய்து வருகின்றனர்.

ஒவ்வொரு விற்பனை பிரதிநிதிகளுக்கும் மாதா மாதம் குறிப்பிட்ட அளவு விற்பனை இலக்கு நிர்ணயிப்பது உண்டு.

அவ்வாறு விற்பனை இலக்கை அடையாத பிரதிநிதிகளை மேலாளர் அஸ்வின் கண்டிப்பது உண்டு.

அதே நேரத்தில் விற்பனை இலக்கை அடையும் விற்பனை பிரதிநிதிக்கு ஊக்கத் தொகை கொடுத்து பாராட்டவும் அவர் தவறுவதில்லை.

ராஜன் பல நேரங்களில் தனது விற்பனை இலக்கை அடைந்து மேலாளர் அஸ்வினிடம் பாராட்டு பெற்றது உண்டு.

மதி வேலைக்கு சேர்ந்த 3 மாதம் மட்டுமே ஆனதால் அவனுக்கு ராஜன் டிரைனிங் கொடுத்துக் கொண்டு இருந்தான்.

கடந்த 2 மாதமாக ராஜனும் மதியும் தங்களது இலக்கை அடையவில்லை.

அதனால் மேலாளர் கோபம் அடைந்தார். அவர்கள் இரண்டு பேரையும் அழைத்து கடுமையான வார்த்தைகளால் திட்டினார்.

விற்பனை இலக்கை அடைய முடியாவிட்டால் வேலையை விட்டு பொய் கொண்டே இருங்கள் என்று திட்டி அனுப்பினார் மேலாளர்.

அப்போது ராஜனை சமாதானப்படுத்த முயன்றான் மதி.

ராஜன் சார் நீங்க வாங்க போகலாம். அவரு இப்படிதான் கத்திக்கிட்டே இருப்பாாரு.

உங்க அருமை இவருக்கு இப்பத் தெரியாது.

நீங்க வாங்க சார் என்று ராஜனை மோட்டார் சைக்கிளில் அமர வைத்து வேகமாக கிளம்பிச் சென்றான் மதி.

வண்டி சாலையில் பறக்க தொடங்கியது.

உச்சி வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தாலும் அதைக் கூட அவர்கள் இருவரும் பொருட்படுத்தவில்லை.

கோபத்தின் உக்கிரம் தான் அவர்களை வாட்டி வதைத்தது.

ராஜனுக்கு உடலெல்லாம் வேர்த்து கொட்டியது. அந்த அளவுக்கு மேலாளர் அஸ்வின் திட்டிவிட்டார்.

வண்டி வேகமாக முன்னோக்கி சென்றது.

ஆனால் அவர்கள் இரண்டு பேரின் மனம் மட்டும் மீண்டும் மீண்டும் பின்னோக்கி சென்றது.

இந்த 2 மாசம் சேல்ஸ் சரியா காட்டலைன்னு வாய்க்கு வந்த வார்த்தையால் திட்டுகிறார்.

இருந்தா இருங்க இல்லைன்னா போய்கிட்டே இருங்கன்னு வெட்டு ஒண்ணு துண்டு ஒண்ணுன்னு பேசறாரு.

எந்தனை முறை டார்கட்டுக்கு மேலே விற்பனை செய்திருப்பேன். அதை எல்லாம் மறுந்திட்டாரு.

அவர் பேசியது என்னால் பொருக்க முடியலை என்று மனம் வருந்தினான் ராஜன்.

சரி விடுங்க சார், நாளைக்கு பேசிக்கிடலாம். நடந்ததை எல்லாம் மறந்திடுங்க என்று ராஜனை சமாதானப்படுத்தினான் மதி.

ராஜனின் மனதில் மேலாளர் அஸ்வின் திட்டியதே ஓடிக்கொண்டு இருந்தது.

இந்த வேலையும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம் நாளைக்கே நான் இந்த வேலையை விட்டுட்டு வேற வேலைக்கு போகலாம் நினைக்கிறேன் என்றான் ராஜன்.

சார் இதுக்கு எதுக்கு சார் வேலை விட்டுட்டு போகப்போறேங்க.

அஸ்வின் சார் இப்படி தான் கத்துவாருன்னு உங்களுக்கு தெரியும். இதை போய் பெரிசா எடுத்துக் வேண்டாம்னு தோனுது.

இல்ல மதி உனுக்கு அஸ்வின் சார் பற்றி தெரியாது. நீ வேலைக்கு வந்து 3 மாசம் தானே ஆகுது.

இவரு இப்படி தான் அடிக்கடி கத்தி மாதிரி வெட்டு வெட்டுன்னு பேசுவாரு.

அதனாலயே இவர்கிட்ட யாரும் ரொம்ப நாள் வேலை பார்க்க மாட்டாங்க.

எனக்கு தெரிஞ்சு ஒரு வருஷமா இவர்கிட்ட வேலை பார்க்கிறது நான் மட்டும் தான்.

மற்ற எல்லாரும் 5 அல்லது 6 மாசத்தில் வேலை விட்டுட்டு ஓடிப்போயிடுவாங்க.

இவருக்கு தொழிலாளர்களிடம் வேலை வாங்க தெரியாது. கத்தி மாதிரி வெட்டிக்கிட்டே தான் இருப்பாரு.

அதனால் நான் இந்த மாசத்தோடு வேலை விட்டு நின்று விடலாம்னு முடிவு செய்துவிட்டேன் என்றான் ராஜன்.

சார் நீங்க வேலைவிட்டுட்டு நின்னுட்டா நானும் வேலை விட்டுடுவேன்.

நீங்க இருந்தா நான் இருப்பேன் என்றான் மதி.

மதி அப்படி சொல்லாதே. உனக்கு வேறு வேலை கிடைக்கிற வரைக்கும் இங்கே இரு. எனக்காக நீ வேலையை விட வேண்டாம்.

எனக்கு இந்த துறையில் அனுபவம் அதிகமாக இருக்கிறதாலே எங்க போனாலும் எனக்கு வேலை கொடுப்பாங்க.

ஆனால் உனக்கு அனுப்பவம் குறைவு தான். அதனால் நீ இன்னும் கொஞ்சம் நாள் இந்த நிறுவனத்திலேயே வேலை பார்த்து அதன் பின் வேறு இடத்துக்கு செல் என்று அறிவுரை வழங்கினான் ராஜன்.

அப்போது ராஜன் வீடு வந்தது. அவன் இறங்கி சென்று விட்டான்.

மறு நாள் காலை வழக்கம் போல் அலுவலகத்திற்கு வந்த ராஜன், மேலாளர் அஸ்வினை சந்தித்து தனது ராஜினாமா கடித்ததை வழங்கினான்.

அதைப் பார்த்த அஸ்வினுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இது என்ன ராஜன் திடீரென ராஜினாமா கடிதம் கொடுக்கிறீங்க என்று கேட்டார்.

இல்ல சார் எனக்கு இங்க வேலை செய்ய பிடிக்கலை.

ஏன் ராஜன், நான் நேற்று திட்டியதால் இந்த முடிவை எடுத்தீங்களா என்றார் மேலாளர்.

சார் அதுவும் ஒரு காரணம் தான்.

நான் எப்படியெல்லாம் வேலை பார்த்தேன் உங்களுக்கு தெரியும்.

இந்த 2 மாதம் மட்டும் தான் என்னால் விற்பனை இலக்கை அடைய முடியும். அதுக்காக இருந்தா இருங்க இல்லாடி போய்கிட்டே இருங்கன்னு சொல்றீங்க…. என்று இழுத்தான் ராஜன்.

அப்போது குறுக்கிட்ட அஸ்வின், ராஜன் இப்பவும் சொல்றேன் உன்னால் விற்பனை இலக்கை அடைய முடிந்தால் வேலையில் இரு… இல்லாவிடில் போய்கிட்டே இரு என்று மறுபடியும் கத்தினார் அஸ்வின்.

கோபம் அடைந்த ராஜன், சார் நான் வேலையை ராஜினாமா செய்துவிடுகிறேன் என்று அழுத்தமாக கூறினான்.

அதனை ஏற்றுக் கொண்டார் மேலாளர் அஸ்வின்.

அவனுக்கு கொடுக்க வேண்டிய சம்பளத் தொகை மற்றும் இதர நடைமுறைகள் முடிக்கப்பட்டதும் ராஜன் அங்கிருந்து கிளம்பினான்.

அதன்பின் மதியை அழைத்த மேலாளர் அஸ்வின், ராஜன் கவனித்த வேலைகளை பார்த்து கொள்ளும்படியும் விரைவில் வேறு ஒரு ஆள் வேலைக்கு நியமிப்பதாகவும் கூறினார்.

அதன்பின் புதிதாக வேலைக்கு ஆட்களை நியமித்தார் அஸ்வின்.

ஆனால் புதிதாக வருபவர்கள் யாரும் நீண்ட நாள் அஸ்வினிடம் வேலை பார்க்க முடியவில்லை.

ஏனென்னால் அவரது சுபாவம் அப்படி இருந்து. யாரையும் வெடுக்கு வெடுக்கென்று திட்டிவிடுவார்.

இப்படியே சில மாதங்கள் கடந்தது.

அனுபவம் வாய்ந்த தொழிலாளர்கள் இல்லாததாலும் புதுப்புது தொழிலாளர்கள் வந்ததாலும் அந்த நிறுவனத்தின் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டது.

அந்த நிறுவனத்தில் உரிமையாளர் விவேக். மேலாளரை அஸ்வினையும் மற்ற விற்பனை பிரிதிநிதிகளை தனித்தனியாக அழைத்து விசாரித்தார்.

அப்படி விசாரித்ததில் மேலாளர் அஸ்வினின் செயல்பாடுகளின் காரணமாகவே எந்த ஒரு திறமையான விற்பனை பிரதிநிதிகளும் அங்கு நீண்ட நாட்கள் வேலை பார்க்காமல் சென்றது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து மேலாளர் அஸ்வினை வேலையைவிட்டு தூக்கினார் உரிமையாளர் விவேக்.

தனது கோபப் பேச்சே தனக்கு வினையாக அமைந்துவிட்டதே என்று மனம் நொந்தபடி சென்றார் அஸ்வின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *