செய்திகள்

கடவுள் படங்களோடு ஒப்பீடு: கமல் உள்பட 3 பேர் மீது வழக்கு

கோவை, ஏப். 4–

தேர்தல் பிரச்சாரத்தில் கடவுள் படங்களோடு கமல்ஹாசன் படத்தையும் இணைத்து பேனர் வைத்ததாக, கமல்ஹாசன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் நிலையில், அதன் தலைவரான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக, அங்கேயே தங்கியிருந்து நாள்தோறும் வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அண்மையில் கமல்ஹாசனுக்கு வைக்கப்பட்ட விளம்பர பதாதைகளில் கடவுளர்களுடன் கமல்ஹாசனை ஒப்பிடும் வகையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து கோவை தெற்கு காவல் நிலையத்தில் சுயேட்சை வேட்பாளர் பழனி என்பவர் கமல்ஹாசன் மற்றும் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் இருவர் மீது புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது, கோவை காட்டூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடவுள் படங்களை பயன்படுத்தி பரப்புரை செய்ததால் கமல்ஹாசன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *