வாழ்வியல்

கடல்நீரில் 203 நுண்ணுயிரிகளை வகைப்படுத்தி தமிழ்மாணவர்கள்  அறிவியல் ஆய்வில் அரிய சாதனை


அறிவியல் அறிவோம்


கடல்நீரில் 203 நுண்ணுயிரிகளை வகைப்படுத்தி தமிழ்நாடு கல்லூரி மாணவர்கள் அறிவியல் ஆய்வில் அரிய சாதனை படைத்துள்ளனர்.

அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் கீழ் பரங்கிப்பேட்டையில் செயல்படும் கடல் உயிரியல் உயர் ஆய்வு மையத்தின் இணை பேராசிரியர் முனைவர் அ.சரவண குமார் அவருடைய மாணவர்கள் மேற்கொண்ட இந்த ஆய்விலேயே இந்த சாதனை படைக்கப்பட்டது. இது குறித்துப் பேராசிரியர் முனைவர் அ.சரவண குமார் பேசியபோது, “ஆசிஸ் மற்றும் வினிதாவுக்கு இவற்றின் மீதுள்ள அதீத ஆர்வத்தையும் ஆய்வு மனப்பான்மையையும் தெரிந்துகொண்டதால் அவர்களை இந்த ஆய்வில் ஈடுபடுத்தினேன்,” என்று கூறுகிறார்.

இருவருமாகச் சேர்ந்து, 203 கடல் உயிரிகளைக் கண்டறிந்து அவற்றின் ஒளிப்பட ஆதாரங்களோடு அவை சாப்பிடும் உணவு, உருவ அமைப்பு என்று அனைத்தையும் பதிவு செய்துள்ளார்கள். கடல்நீர் நுண்ணுயிரிகளில் இவ்வளவு வகைகளைக் கண்டறிந்து வகைப்படுத்தியது இதுவே முதல்முறை.

கடல்நீரில் 203 நுண்ணுயிரிகளை வகைப்படுத்தி ஆராய்ந்த தமிழ்மாணவர்களை அறிவியல் ஆய்வு உலகம் போற்றுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *