செய்திகள்

கடலூரில் 7-ம் தேதி முதல் 17-ம் வரை ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்: கலெக்டர் அன்புச்செல்வன் நேரில் ஆய்வு

Spread the love

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் வருகிற 7–ம் தேதி முதல் 17–ம் தேதி வரை நடைபெறுவது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்து கலெக்டர் அன்புச்செல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் வருகிற 7–ந் தேதி முதல் 17–ந் தேதி வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் வேலூர், விழுப்புரம், சென்னை, திருவண்ணாமலை, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி யூனியன் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த நபர்கள் கலந்து கொண்டு அனைவரும் பயன்பெறலாம்.

இம்முகாமில் மருத்துவ வசதி, பாதுகாப்பு, தடையில்லா மின்சாரம், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. நகரின் முக்கிய பகுதிகளில் விளம்பர பலகைகள் மூலம் விளம்பரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட இளைஞர்கள் இந்த ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இம்முகாமினை சிறப்பாக நடத்திட அனைத்து அலுவலர்களும் தங்கள் பணிகளை திறம்பட செய்திட வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களை மாவட்ட கலெக்டர் கேட்டுக் கொண்டார்.

மேலும் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறும் நாட்களில் மட்டும் அண்ணா விளையாட்டரங்கில் நடைபயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சிகள் மேற்கொள்ள அனுமதி இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜகிருபாகரன், கடலூர் சார் ஆட்சியர் சரயூ, கர்ணல் தருண்துவா, மேஜர் பிரஜேஷ், சுபேதார், எஸ்.எம்.பட், உதவி இயக்குநர் (முன்னாள் படைவீரர் நலன்) தெய்வசிகாமணி, கடலூர் நகராட்சி ஆணையர் அரவிந்த் ஜோதி, துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *