செய்திகள்

கடலூரில் புனரமைக்கப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடம்: கலெக்டர் சிபி ஆதித்யா திறந்து வைத்தார்

Makkal Kural Official

கடலூர், ஜன. 11–

கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கில் புனரமைக்கப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடத்தினை மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, துணைமேயர் பா.தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில், “அனைத்து மாவட்ட விளையாட்டு வளாகங்களில் உள்ள உடற்பயிற்சிக்கூடங்கள் குளிர்சாதன வசதிகளுடன் மேம்படுத்தப்படும்” என அறிவித்தார்.

அதற்கிணங்க, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள கடலூர் மாவட்டப் பிரிவின் பல்நோக்கு உள்விளையாட்ரங்க உடற்பயிற்சி கூடத்தில் மாணவ, மாணவியர், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தற்போது பல்வேறு வகையான உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் குளிர்சாதன வசதியுடன் புனரமைக்கப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த உடற்பயிற்சிக் கூடம் காலை மற்றும் மாலை என இருவேலையும் ஆண், பெண் என இருபாலரும் பயனடையும் வகையில் செயல்படும். இப்பயிற்சி பெறுவதற்கு மாதந்தோறும் குறைந்த கட்டணமாக ரூ.840 செலுத்தினால் மட்டுமே போதுமானது. இதனை இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நமது மாவட்டத்தில் 174 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தயார்நிலையில் உள்ளது. தற்போது 45,000 ஹெக்டர் அளவில் அறுவடை பணிகள் நடைபெற்றுள்ளது. அதற்கு தேவையான இடங்களில் 14 நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகிறது. மேலும் தேவைக்கேற்ப நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்குவதற்கு போதிய இயந்திரங்கள் மற்றும் பணியாளர்கள் தயார்நிலையில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் முஜிபூர் ரஹ்மான், மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ், பயிற்றுநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *