கடலூர், மார்ச் 1–
கடலூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி வரை ஏமாற்றி தலைமறைவான பெண் மீது நடவடிக்கை மேற்கொண்டு, தாங்கள் இழந்த பணத்தை மீட்டுத்தரக்கோரி பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
கடலூர் அடுத்த புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாலா (எ) பத்மினி. இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள், ஐம்பதாயிரம் முதல் ஒன்றரை லட்சம் வரை சீட்டு பணம் மற்றும் தீபாவளி ஃபண்டு செலுத்தியுள்ளனர்.
மோசடி பெண் தலைமறைவு
இந்நிலையில், அப்பகுதி பெண்கள் கட்டிய சீட்டு பணம் ஏறத்தாழ ரூ.1 கோடியை பெற்றுக்கொண்ட பத்மினி, பல மாதங்கள் ஆகியும் பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். மேலும், பத்மினியை சந்திக்கச் சென்ற பொழுது, அவர் எங்கே உள்ளார் என தெரியவில்லை என்று அவரது உறவினர்களும் கூறியுள்ளனர்.
இதனால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட பெண்கள், பத்மினியை கண்டுபிடித்து, அவரிடமிருந்து தங்களது பணத்தை மீட்டுத் தரவேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். பலமுறை காவல்நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எ