செய்திகள்

கடலூரில் உலக மக்கள் தொகை தின கருத்தரங்கு: கலெக்டர் அன்புசெல்வன் துவக்கி வைத்தார்

கடலூர், செப். 8–

கடலூரில் உலக மக்கள் தொகை தின கருத்தரங்கை கலெக்டர் அன்புச்செல்வன் துவக்கி வைத்தார்.

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உலக மக்கள் தொகை தின கருத்தரங்கினை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் துவக்கி வைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை கலெக்டர் அன்புச்செல்வன் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், கடலூர் மாவட்டம் சுாதாராத்தில் முதன்மையான மாவட்டமாக திகழ்வதற்கு சுகாதாரத்துறையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். இன்றைய தினம் நடைபெறும் உலக மக்கள் தொகை தின கருத்தரங்கில் தெரிவிக்கப்படும் கருத்துக்களை நீங்கள் அனைவரும் நன்கு தெரிந்துகொண்டு பயன்பெறவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அனைவரையும் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நல இணை இயக்குநர் (மருத்துவம்) ரா.வசந்தி வரவேற்றுப் பேசினார். இந்நிகழ்ச்சியில் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நல துணை இயக்குநர் (மருத்துவம்) இரா.கலா திட்ட விளக்கவுரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (சுகதாராப்பணிகள்) ம.கீதா, ரத்த வங்கி மருத்துவ அலுவலர் கு.சாய்லீலா, மாவட்ட தாய்சேய் நல அலுவலர் பி.மகேஸ்வரி, மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலர் வி.ஆறுமுகம், மாவட்ட குடும்ப நல செயலக இளநிலை நிர்வாக அலுவலர் என்.மீராபாய், மருத்துவமனை கண்காணிப்பாளர் என்.ஹபிசா, மாவட்ட சுகாதார திட்ட அலுவலர் பரிமேலழகர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் கடலூர் புள்ளி விவர உதவியாளர் ஆ.அரவிந்தபாபு நன்றி உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *