வாழ்வியல்

கடலில் மிதக்கும் காற்று மின் உற்பத்தி நிலையம்: நார்வேயின் கண்டுபிடிப்பு

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் தங்கள் கடற்கரையிலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் பெரிய காற்றாலைகளை நிறுவி, ‘பசுமை’ மின் உற்பத்தியை அதிகரித்து வருகின்றன.

கடலில் மிதக்கும் காற்று மின்னாலைத் துறையில் போட்டிகள் வலுக்கின்றன. இந்த நிலையில், நார்வேயின் ‘விண்ட் கேட்ச்சர் சிஸ்டம்ஸ்’ ஒரு புதுமையான கடல் மிதவைக் காற்றாலையை அறிமுகப்படுத்தியுள்ளது.

மூன்று அல்லது நான்கு விசிறிகளைக் கொண்ட காற்றாலைக்குப் பதிலாக, விண்ட் கேட்ச்சரின் கண்டுபிடிப்பு 117 சிறிய விசிறிகளைக் கொண்டுள்ளது. கடலில் ஒரே இடத்தில் மிதக்கும் இந்த அமைப்பின் உயரம் 1000 அடி ஆகும்.

உலகின் மிகப் பெரிய காற்றுமின் மிதவை ஆலையை விட, ஆண்டுக்கு ஐந்து மடங்கு அதிக மின் உற்பத்தியை விண்ட் கேட்ச்சர் அமைப்பால் தர முடியும். அதாவது 80 ஆயிரம் ஐரோப்பிய வீடுகளின் மின்சாரத் தேவையை, ஒரே ஒரு விண்ட் கேட்ச்சர் அமைப்பு நிறைவேற்றி விடும்.

வழக்கமான காற்றாலையின் ஒரு விசிறி அல்லது மின் ஜெனரேட்டர் பழுதானாலும் அதன் மொத்த செயல்பாடும் நின்றுவிடும். ஆனால், விண்ட் கேட்ச்சரின் 117 சிறு விசிறிகளில் சில பழுதானாலும் மற்றவை தொடர்ந்து மின்சார உற்பத்தியைத் தொடரும். தவிர விண்ட் கேட்ச்சரின் பராமரிப்பும் எளியது. எனவே நார்வேயின் கண்டுபிடிப்பு விரைவில் ஹிட் ஆக வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *