செய்திகள்

கடம்பத்தூர் ஒன்றியத்தில் இளைஞர் பாசறை புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம்: மாவட்டச் செயலாளர் பி.ரமணா துவக்கி வைத்தார்

திருவள்ளூர், செப். 16–

திருவள்ளூர் மேற்கு மாவட்டம். திருவள்ளூர் கடம்பத்தூர் ஒன்றியம் சிற்றம்பாக்கம் ஊராட்சியில் உள்ள சீனிவாசா மஹாலில் கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்ப்பு முகாம் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பிவி. ரமணா தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு கடம்பத்தூர் ஒன்றிய கழக செயலாளர் சூரகாபுரம் சுதாகர் முன்னிலை வகித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் சிற்றம் ஜெ.சீனிவாசன் செய்திருந்தார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பிவி.ரமணா இளைஞர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் பிவி.ரமணா பேசியதாவது:-

அண்ணா தி.மு.க. என்றுமே ஒரு எஃகு கோட்டை. அம்மா இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையை உருவாக்கி கட்சிக்கு வலு சேர்த்து கொடுத்திருக்கிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆலோசனையின் படி நடந்து வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு பூத்திருக்கு ஒருவரை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

அம்மா மறைந்த பின்பு அண்ணா தி.மு.க. கலைந்துவிடும் என்று திமுக எண்ணியது. ஆனால் கழகத்தை ஆலமரம் போல் உருவாக்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறந்த முறையில் ஆட்சி செய்து வருகிறார்கள். மக்கள் மனதில் அண்ணா தி.மு.க.வுக்கு என்று தனி இடம் உள்ளதால் நமது ஓட்டு சிந்தாமல் சிதறாமல் நமக்கு கிடைத்துவிடும். அம்மா அரசின் திட்டங்களை இளைஞர்களாகிய நீங்கள் மக்களிடம் எடுத்துக் கூறினால் நாம் வெற்றி பெறுவது நிச்சயம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் சுதாகர், கடம்பத்தூர் பூபாலன், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஞானகுமார், காசி, இன்ப நாதன், ரஜினி, கடம்பத்தூர் வட்டார ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் ரமணிசீனிவாசன்,நயப்பாக்கம் சிவகுமார், பைட்டர் அலி, செஞ்சி பாலு, மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *