செய்திகள்

கடன் பெற்றவர்களின் கணக்கை தானாக கண்காணிக்கும்; தவறும்பட்சத்தில் எச்சரிக்கும் வசதி

கடன் பெற்றவர்களின் கணக்கை தானாக கண்காணிக்கும்;

தவறும்பட்சத்தில் எச்சரிக்கும் வசதி:

பாங்க் ஆப் இந்தியாவில் அறிமுகம்

 

சென்னை, ஜூன். 29–

பாங்க் ஆப் இந்தியா செயல்பாடு, டிஜிட்டல் முறையில் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கடன் பெற்றவர்களின் கணக்குகளை அதிகாரிகள் இன்றி, தானாக கண்காணித்து, அது தவறும்பட்சத்தில் முன்னதாக எச்சரிக்கும் ‘சிக்னல்’ வசதியை அமல் படுத்தி வருகிறது. இதன் நிர்வாக சாப்ட்வேர், ஸ்டார் மகா சக்தி திட்டத்தின் கீழ் ‘பின்னகிள் 10’ என மேம்படுத்தப்பணிகள் விரைவாக நடக்கும் என்று நிர்வாக இயக்குனர் அத்தனு குமார் தாஸ் தெரிவித்தார்.

வங்கி, நான்காவது காலாண்டில் ரூ.3,571 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. இதுகுறித்து வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2018-–19 நிதியாண்டில் ஜனவரி-–மார்ச் வரையிலான நான்காவது காலண்டில் வங்கி வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.252 கோடியை ஈட்டியது. இந்த நிலையில், வாராக் கடனுக்கான ஒதுக்கீடு அதிகரித்ததையடுத்து 2019-–20 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் வங்கிக்கு ரூ.3,571 கோடி தனிப்பட்ட நிகர இழப்பு ஏற்பட்டது.

2018-–19 முழு நிதியாண்டில் ரூ.5,547 கோடியாக காணப்பட்ட தனிப்பட்ட நிகர இழப்பு 2019-–20-ஆம் நிதியாண்டில் ரூ.2,957 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டில் மட்டும் வாராக் கடன்களுக்காக ரூ.14,416 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்த வாராக் கடன் விகிதம் 15.84 சதவீதத்திலிருந்து 14.78 சதவீதமாக குறைந்துள்ளது.

அதேபோன்று நிகர வாராக் கடன் விகிதமும் 5.61 சதவீதத்திலிருந்து 3.88 சதவீதமாகியுள்ளது. வங்கியின் சார்பில் எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகளையடுத்து கடந்த நிதியாண்டில் ரூ.1,279 கோடி மதிப்பிலான கடன் திரும்பப் பெறப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி மொத்த உள்நாட்டு டெபாசிட் 14.40 சதவீதம் அதிகரித்து ரூ.4,82,539 கோடியாகவும், வழங்கப்பட்ட கடன் 9 சதவீதம் உயர்ந்து ரூ.3,57,570 கோடியாகவும் இருந்தன. நடப்பு நிதியாண்டில் கடன் வளர்ச்சி விகித எதிர்பார்ப்பு 8-9 சதவீதமாக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *