செய்திகள்

கடன் தீர்க்கும் மடப்புரம் விலக்கு தெற்கு முக விசாலாட்சி விநாயகர்

திருப்புவனம், செப்.12–

மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் 18 கி.மீ தொலைவில் உள்ள திருப்புவனம் வைகை ஆற்றுப்பாலம் அடுத்த மடப்புரம் விலக்கு ஆர்ச் எதிரில் விசாலாட்சி ஜோதிட மந்திராலயத்தில் உள்ளது. விநாயகர் கோவில் மடப்புரம் விலக்கில் உள்ள இந்த கோவிலில் தினசரி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பக்தர்கள் வருகை தந்து வலம்புரி விநாயகருக்கு 7 தேங்காய் மாலை சாற்றி 7 லட்டு, 7 எலுமிச்சை பழம் வைத்து 108 முறை வலம் வந்து வழிபாடு செய்கிறார்கள். இதனால் கடன் தொல்லை தீர்ந்து, திருமணத்தடை அகன்று முன்னோர் சாபமும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். கோவில் தரிசன தொடர்புக்கு கைப்பேசி எண்.94431 – 65504.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *