செய்திகள்

கடந்த 8 ஆண்டுகளில் நடந்த 5,931 வருமான வரி சோதனைகளில் ரூ.8,800 கோடி சொத்துகள் பறிமுதல்

பார்லிமெண்டில் மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி, மார்ச் 21–

நாடு முழுவதும் கடந்த 2014-2015-ம் ஆண்டு முதல் 2021-2022 வரை நடத்தப்பட்ட 5,931 வருமான வரி சோதனை நடவடிக்கையின் மூலம் 8 ஆயிரத்து 800 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு பாராளுமன்ற மக்களவையில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான ஒரு கேள்விக்கு பதில் அளித்த நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, கருப்பு பண சட்டத்தின்கீழ் ரூ.13,500 கோடிக்கும் மேல் வரி கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. 2015-ல் சட்டம் இயற்றப்பட்டதில் இருந்து இதுவரை 350 வழக்குகளில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார்.

ஏ.டி.எம்.களில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை ஏற்றலாமா?, வேண்டாமா? என்பது குறித்து வங்கிகளுக்கு எந்த உத்தரவும் வழங்கவில்லை என்றும் மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.

ஏ.டி.எம். எந்திரங்களில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை நிரப்பாதது குறித்து வங்கிகளுக்கு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை. கடந்த கால பயன்பாடு, நுகர்வோர் தேவை, பருவகால போக்கு போன்றவற்றின் அடிப்படையில் ஏ.டி.எம்.களுக்கான தொகை மற்றும் மதிப்பின் தேவையை வங்கிகள் தாங்களாகவே மதிப்பீடு செய்கின்றனர் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *