செய்திகள்

கடந்த 5 ஆண்டுகளில் ஐ.ஐ.டி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் 98 மாணவர்கள் தற்கொலை

புதுடெல்லி, ஜூலை.27-

கடந்த 5 ஆண்டுகளில் ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் 98 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று மாநிலங்களவையில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் தெரிவித்தார்.

மக்களவையில் கேள்வி நேரத்தில் மத்திய பணியாளர் நலத்துறை இணை மந்திரி ஜிதேந்திரசிங் ஒரு கேள்விக்கு பதில் அளித்து கூறுகையில், இந்த ஆண்டு ஏப்ரல் 1ந் தேதி நிலவரப்படி, மத்திய தகவல் ஆணையத்தில், 19 ஆயிரத்து 233 புகார்களும், மேல்முறையீடுகளும் நிலுவையில் உள்ளன. அத்துடன் 4 தகவல் ஆணையர்கள் பதவி இடங்கள் காலியாக உள்ளன என தெரிவித்தார்.

மாநிலங்களவை கேள்வி நேரத்தில், மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் கூறியதாவது:-

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவு, கடந்த 2019-ம் ஆண்டு நீக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, காஷ்மீர் அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. பெரிய அளவில் ஆள்தேர்வு நடத்தப்பட்டது. அதன் பலனாக, சுமார் 30 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநிலங்களவை கேள்வி நேரத்தில், மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுபாஷ் சர்கார் கூறியதாவது:-

கடந்த 5 ஆண்டுகளில், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி., மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் 98 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் இதுவரை 20 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதிகபட்சமாக, ஐ.ஐ.டி.களில்தான் 39 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பெரும்பாலானோர் என்ஜினீயரிங் படித்தவர்கள் ஆவர்.

தனிமை உணர்வு, வன்முறை, குடும்ப பிரச்சினை, மனநல பிரச்சினை ஆகியவைதான் தற்கொலைக்கான காரணங்கள் ஆகும் என தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *