செய்திகள்

கஜா புயல் நிவாரணப் பணிகளில் சிறப்பாக செயல்படும் தமிழக அரசு

சென்னை,நவ.23–

கஜா புயல் நிவாரணப் பணிகளில் தமிழக அமைச்சர்கள் சிறப்பாக செயல்பட்டதாக வைகோ பாராட்டியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கஜா புயல் நிவாரணப் பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. சீரமைப்பு பணிகளில் அரசு அதிகாரிகள் மற்றும் மின் ஊழியர்கள் மிகச்சிறப்பாக பணியாற்றுகின்றனர். உயிரை பணயம் வைத்து மின்சார ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

நாட்டிலேயே மிகச் சிறந்த நிர்வாகிகள், தமிழக அதிகாரிகள் என்பதை மீண்டும் நிலை நிறுத்தியுள்ளனர். 50 ஆண்டுகளுக்கு பிறகு அதிகாரிகள் நற்பெயரை பெற்றுள்ளனர்.

நிவாரணப் பணிகளில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், டாக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

போராட்டம் நடத்துவதற்கு மக்களை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடவில்லை.

மாநில அரசு கேட்ட நிவாரண நிதியில் 5 சதவிகிதத்திற்கு மேல் மத்திய அரசு கொடுக்காது. முதல் அமைச்சர் தஞ்சையில் முகாம் அமைத்து செயல்பட்டு இருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *