செய்திகள்

‘கஜா’ புயலில் உயிரிழந்தவர்கள், நெல் ஜெயராமன், டாக்டர் ஜெயச்சந்திரன், வாஜ்பாய் மறைவுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல்

சென்னை, ஜன.3–

தமிழக சட்டசபையில் இன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தமிழக சட்டசபையில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் கவர்னர் பீஷ்ம நாராயண் சிங், முன்னாள் பார்லிமெண்ட் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, புகழ் பெற்ற தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், ‘நெல்’ ஜெயராமன், 5 ரூபாய்க்கு ஏழைகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் எஸ். ஜெயச்சந்திரன் மற்றும் கஜா புயலில் உயிரிழந்தவர்கள் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானங்களை சபாநாயகர் தனபால் படித்தார்.

ஒவ்வொருவரின் சிறப்புகள், சாதனைகளை எல்லாம் சபாநாயகர் எடுத்து கூறினார்.

கஜா புயலால் தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திண்டுக்கல், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அரசு எடுத்த முன் எச்சரிக்கை நடவடிக்கையால் உயிர்சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை செய்தார். அமைச்சர்கள், அதிகாரிகள் அங்கேயே முகாமிட்டு நிவாரண பணிகளை செய்தார்கள் என்று சபாநாயகர் குறிப்பிட்டார்.

உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 2 நிமிடம் அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்த வேண்டும் என்று சபாநாயகர் கூறினார். உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *