செய்திகள்

கங்கை ஆற்று நீரின் தரம் உயர்ந்தது: கங்கை தூய்மை இயக்கத் தலைவர் தகவல்

டெல்லி, அக். 25–

கங்கை ஆற்று நீரின் தரம் கடந்த 2014ம் ஆண்டுக்கு பின்னர் குளிப்பதற்கு ஏற்றதாக மீண்டும் மேம்பட்டுள்ளது.

உத்தராகண்டம் மாநிலத்திலுள்ள கங்கோத்ரியில் தொடங்கும் பாகிரதி ஆறு, தேவப்பிரயாக் எனுமிடத்தில் அலக்நந்தா ஆற்றுடன் கலந்து கங்கையாக மாறுகிறது. பின்னர் உத்தரப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்கள் வழியாகச் சென்று, ஹூக்லி, பத்மா என இரு ஆறுகளாக பிரிந்து மேற்கு வங்காளம், வங்கதேசம் வழியாகச் சென்று வங்கக் கடலில் கங்கை கலக்கிறது.

இந்துகளின் புனித ஆறாக கருதப்படும் கங்கையின் கரையோரம், சடலங்கள் எரிக்கப்படுவதுடன் ஆற்றிலும் சடலங்கள் விடப்படுகின்றன. மனித கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் போன்றவை காரணமாக கங்கை நதி அசுத்தம் அடைய தொடங்கியது. இதையடுத்து கங்கையை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளில் இந்திய அரசு தீவிரம் கட்டத் தொடங்கியது. இதன் பயனாக தற்போது கங்கை நீரின் தரம் மேம்படத் தொடங்கியுள்ளது.

மேம்பட்ட கங்கை நீர்

இது தொடர்பாக தேசிய கங்கை தூய்மை இயக்கத்தின் (என்எம்ஜிசி) இயக்குநா் ராஜீவ் ரஞ்சன் மிஸ்ரா, பிடிஐ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், கடந்த 2014 ஆம் ஆண்டில் கங்கையில் 53 இடங்களில் அதன் தரம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 32 இடங்களில் குளிப்பதற்கு உகந்த தரத்தில் தண்ணீா் இருந்தது. தண்ணீரில் கரைந்திருக்கும் ஆக்சிஜனின் அளவை (biochemical oxygen demand (BOD)) வைத்து அதன் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது.

தற்போது 2021 ஆம் ஆண்டில் கண்காணிப்பு இடங்களின் எண்ணிக்கை 97ஆக அதிகரிக்கப்பட்டது. இதில், 68 இடங்களில் குளிப்பதற்கு உகந்த தரத்தில் கங்கை ஆற்று நீர்இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கரைந்த ஆக்ஸிஜன் அளவும் கங்கை நதியில் மேம்பட்டுள்ளதாக மிஸ்ரா கூறினார்.

“தற்போது, கங்கை ஆறு, நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச அளவு 5 மி.கி./லி.யை விட அதிகமாக கரைந்த ஆக்ஸிஜனை (DO) கொண்டுள்ளது. கடந்த 2014-இல் இருந்து 2021-ஆம் ஆண்டுக்குள் கங்கை ஆற்றில் தண்ணீரின் தரம் மேம்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *