செய்திகள்

ஓ.என்.ஜி.சி. சார்பில் 2500 காவலர்களுக்கு பாதுகாப்பு கவச உடைகள்

ஓ.என்.ஜி.சி. சார்பில் 2500 காவலர்களுக்கு பாதுகாப்பு கவச உடைகள்

கமிஷனர் ஏ.கே.விசுவநாதனிடம், கே.எஸ்.பூஷன் வழங்கினார்

சென்னை, மே 23–

சென்னையில் உள்ள ஓ.என்.ஜி.சி. காவேரி படுகை, தன்னுடைய சமூகநல முன்முயற்சியின் கீழ் ரூ.14.47 லட்சம் விலைமதிப்புள்ள 2500 தனியார் கவச உடைகளை பெருநகர சென்னை காவல்துறையிடம் வழங்கியது. இவை சென்னை காவல்துறையின் காவல் எல்லைக்குள் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் பணியாற்றும் காவல் துறையினருக்கு வழங்கப்படும்.

சென்னையில் ஓ.என்.ஜி.சி. காவேரி படுகை-யின் செயல் இயக்குநரான கே.எஸ். பூஷன் இந்த கவசங்களை பெருநகர சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விசுவநாதனிடம் வழங்கினார். தலைமை பொது மேலாளர் என். மணி, பெருநகர சென்னை காவல்துறை துணை ஆணையர்- நுண்ணறிவுப் பிரிவு ஆர்.திருநாவுக்கரசு, மற்றும் ஓ.என்.ஜி.சி. பெருநகர சென்னை காவல்துறையின் மூத்த அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

ஓ.என்.ஜி.சி-யின் முன்முயற்சியையும், இந்த இக்கட்டான சமயத்தில் உதவிக்கரம் நீட்டியதையும் கமிஷனர் விஸ்வநாதன் மிகவும் பாராட்டினார்.

இந்த 2500 பாதுகாப்பு கவசம் ஒவ்வொன்றிலும், ஒரு பாட்டில் கிருமி நாசினி

ஒரு பாட்டில் கை கழுவும் திரவம், 2 சோப்புகளும் மீண்டும் பயன்படுத்தத்தக்க காட்டன் முகவுறைகளும் (5 எண்ணிக்கை), கையுறைகளும் (3 ஜோடிகள்) மற்றும் துவைக்கும் சோப்பும் ஒரு துணிப்பையில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நெருக்கடியான சூழலில்,

ஓ.என்.ஜி.சியிடமிருந்து கிடைத்திருக்கும் இந்த உதவியினால், காவல்துறையினர் மிகவும் பாதுகாப்பான முறையில் தங்களுடைய பணிகளைச் செய்ய முடியும்

சென்னையில் உள்ள ஓ.என்.ஜி.சி. காவேரி படுகை, சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள 11 நகர பஞ்சாயத்துகளுக்கு சுகாதார, துப்புறவுப் பணியாளர்கள் பயன்படுத்துவதற்காக பாதுகாப்பு கவச பொருட்களை வாங்கவும், தொற்று நீக்கி தெளிப்பான் டேங்குகளை வாங்கவும் ரூ. 9.59 லட்சம் நிதி உதவியை வழங்கியிருந்தது. இவை மட்டுமல்லாமல், சென்னை அண்ணா நகரில் உள்ள ஓ.என்.ஜி.சி. ரெசிடன்ட் வெல்வேர் அசோசியேஷன் (RWA), மற்றும் சென்னையில் உள்ள ஓ.என்.ஜி.சி. ஆபீசர்ஸ் மகிள சமிதி (OOMS) ஆகியவை இணைந்து இந்த சவால்மிக்க நேரத்தில் ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் ரேஷன் பொருட்களையும் துப்புறவுப் பொருட்களையும் வழங்குவதற்காக பெருநகர சென்னை மாநகராட்சியிடம் கோவிட்-–19-க்கு எதிரான போரில் உதவியளிக்கும் வகையில் ரூ.2.45 லட்சம் நிதி உதவியை வழங்கியிருந்தன. கோவிட்-–19 பெருந்தொற்றுக்கு எதிராக நாடே போராடுகையில் அதற்கு அதரவளிக்கும் வகையில் PM CARES நிதிக்கு ஓ.என்.ஜி.ஸி தன்னுடைய கார்ப்பரேட் அளவில் ரூ.316 கோடியை வழங்கியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *