சிறுகதை

ஓரு சொட்டுத் தண்ணீர்… | ராஜ செல்லமுத்து

Spread the love

“சொட்டு” என்பது “துளி”…

“துளி” என்பது “கடல்”!

“சொட்” “சொட் ” என குழாயிலிருந்து சொட்டிக்கொண்டிருந்தது தண்ணீர்.

ராம் அதைச் சட்டை செய்யாமலேயே தன் வேலைகளில் மூழ்கியிருந்தான்.

“சொட்” “சொட்” என மீண்டும் சொட்டிக்கொண்டே இருந்தது,

அவன் அதைக் காதில் வாங்காமல் ஹியர் போனை எடுத்துக் காதில் வைத்து பாடல் கேட்டுக் கொண்டேயிருந்தான்.

“டேய், ராம், ராம், குடிக்க தண்ணீர் கேன் வாங்கச் சொன்னே வாங்குனியா இல்லையா? என்று அம்மா லட்சுமி சொன்னது கூட அவன் காதில் வாங்காமல் பாடல் கேட்டபடியே இருந்தான்.

“டேய், நான் சொன்னது காதில் விழுந்துச்சா என்ன?

என்று கேட்டபோது, “ஏதோ, அம்மா சொல்றாங்களே” என்ற ராம் ஹியர் போனை எடுத்தான்.

“என்னம்மா சொல்ற?”

“டேய், நான் சொன்னது கேட்டுச்சா இல்லையா?”

“தண்ணி தான?”

“ஆமாப்பா” சுத்தமா வீட்டில தண்ணி இல்ல, நைட்டே தண்ணீர் சொன்னயே ஏன் வரல.

“சீ சொன்ன உடனே போன் பண்ணனேம்மா. அவன் இந்தா வாரேன், இந்தா வாரேன்னு தான் சொல்றானேயொழிய வந்தபாடில்லையே. இப்ப மறுபடியும் போன் பண்றேன்” என்றவன் வாட்டர் கேன் போடும் சசிக்கு போன் செய்தான்.

“சசி என்னாச்சு? நைட் தண்ணி கொண்டு வாரேன்னு சொன்னீங்க. ஆனா, இன்னும் வரலியே, ஏன் ஏதாவது பிரச்சனையா? என்றான் ராம்.

“சார், சொன்னா நம்பமாட்டீங்க. இன்னும் தண்ணி வரல’’

“எப்ப வருமாம்?”

“தெரியலையே” சார், கேன் தண்ணீங்கிறது கூட, நிலத்துக்கு கீழ இருந்து தான் வரணும். கேன்ல இருந்து தண்ணி எதுவும் வராது !

இப்ப இருக்கற சூழல்ல, தண்ணீங்கிறதில கூட தாகம் இருக்குது. அவ்வளவு வறட்சி இருக்குது இங்க. தண்ணீர் கேன் வராது கொஞ்சம் சிரமம்தான். கொஞ்சம் பொருத்துக்கங்க. தண்ணீர் வந்தா உடனே வாரேன் என்று சசி சொல்ல,

“ஓகே” கொண்டுவாங்க” என்ற ராம் பெருமூச்சோடு அம்மாவை பார்த்தான்.

“என்னடா தண்ணி வருதா?”

” ம்ஹூகும்”

“என்னாச்சு?”

“தண்ணி வரலையம்மா!”

“என்னடா சொல்ற. தொண்டைய நனைக்க கூட ஒரு சொட்டு தண்ணி இல்லையே,

“பொறுத்து தான்மா ஆகணும்”

“டேய் , எத வேணும்னாலும் பொறுத்துக்கலாம். “தாகம்” டா கொஞ்சம் கூட பொறுக்க முடியாது . தண்ணியில்லாம இங்க ஒரு வேலையும் நடக்காது. வேற எங்கேயாவது கேட்டுப் பாரேன்.

அவர்கள் பேசும்போது “சொட்டு” தண்ணீர் கொட்டிக்கொண்டே இருந்தது.

“சரிம்மா” என்ற ராம் மீண்டும் வேறு நம்பருக்குச் சுழற்றினான்.

“ஹலோ”

“சொல்லுங்க”

தண்ணியிருக்கா?

“இல்லைங்களே”

சார், ஒரு கேனாவது கிடைக்குமா?

“சுத்தமா தண்ணி இல்லீங்களே சார் . எவ்வளவு பணம் வேணும்னாலும் வாங்கிக்கங்க. ஒரே ஒரு கேன் மட்டும் கிடைக்குமா?

“ம்ம்” என்ன சார். உங்களோட ஒரே ரோதனையா இருக்கு சரி ஒரே ஒரு கேன் மட்டும் தான் இருக்கு. ஆனா ஒரு கேன் ஐநூறு ரூபா தரும் மோடியுமா?

என்னது 500 ரூபாயா? ஆமா சார் வேணும்னா சொல்லுங்க; கொண்டு வாரேன். இல்ல இந்த ஒரு கேனுக்கும் கெராக்கி அதிகமா இருக்கு. சீக்கிரம் சொல்லுங்க; அதுவும் வித்துப் போகும்” என்று பயமுறுத்தினான் தண்ணீர் கேன் விற்பவன்.

“சரி, சீக்கிரம் கொண்டு வாங்க” என்று போனை ஆப் செய்தான் ராம்

“அம்மா தண்ணி வருது ஆனா ஒரு கேன் ஐநூறு ரூபா என்ற போது என்னது ஐநூறா? என்று வாய் பிளந்தாள் லட்சுமி.

என்னடா சொல்ற?

“ஆமாம்மா தண்ணீருக்கு ரொம்ப தட்டுப்பாடாம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே தண்ணீர் கேனை கொண்டு வந்தான். தண்ணீர் விற்பவன்.

“இங்கு வையுங்க, என்று அம்மா சொன்ன போது, தண்ணீரை இறக்கி வைத்தான் ராம் கொடுத்த 500 ரூபாயை வாங்கியவன் மெல்ல நகர்ந்தான்.

“சொட்” “சொட்” என்று கேட்ட சத்தத்தைக் கேட்டு திரும்பியவன் நேரே போய் அந்தச் “சொட்டு” நீரை “பட்”டென நிறுத்தினான்.

இந்த மாதிரி நீங்க தண்ணீரை வேஸ்ட் பண்ணுனீங்கனா 500 ரூபா இல்ல 1000 ரூபா கூட குடுத்து வாங்க வேண்டியிருக்கும்”

என்னங்க, ஒரு சொட்டு போயி என்ன செய்யும்?

“என்னது ஒரு சொட்டா?”

“இந்த ஒரு சொட்டு” எவ்வளவு பெரிய பிரளயம்னு தெரியுமா?

ஒவ்வொரு சொட்டுக்குள்ளயும் பெரிய கடலும் அடங்கியிருக்கு. இனிமே சொட்டு கூட கீழ விழாம பாத்துக்கங்க. இல்லனா இப்பகுடுத்தவிட இன்னும் அதிகமா விலை குடுக்க வேண்டியிருக்கும் என்று சொல்லிச் சென்றான்.

அவனை…….

ராமுவும் அம்மா லட்சுமியும் அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *