செய்திகள்

ஓரிக்கை விநாயகர், முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

காஞ்சீபுரம், பிப்.1

கோவில் நகரமாம் காஞ்சீபுரம் பகுதிக்குட்பட்ட ஓரிக்கை விஸ்வநாததாஸ் நகர் பகுதியில் பொதுமக்கள், நன்கொடையாளர்கள் பங்களிப்போடு ஸ்ரீ வினை தீர்க்கும் விநாயகர், ஸ்ரீ முத்துமாரியம்மன் மற்றும் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கும் புதியதாக கோவில் கட்டி முடிக்கப்பட்டது.

கோவில் கட்டி முடிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடை பெற்றது.

யாக சாலை பூஜைகள், ஹோமங்கள் நடத்தப்பட்டு கோ பூஜை, வாஸ்து சாந்தி, பூர்ணாஹூதி ஆராதனைகள் செய்யப்பட்டது.

கும்பாபிஷேக விழாவையொட்டி புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோவிலின் கோபுர கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் ஓரிக்கை சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் பக்தர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *