செய்திகள்

ஓணம் பண்டிகை: உண்ணும் போட்டியில் இட்லி தொண்டையில் சிக்கி ஒருவர் பலி

Makkal Kural Official

பாலக்காடு, செப். 15–

ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்பட்ட உணவு உண்ணும் போட்டியில், லாரி டிரைவரின் தொண்டையில் இட்லி சிக்கி பலியானார்.

நாட்டில் நீண்ட காலமாக உணவு உண்ணும் போட்டிகள் நடக்கிறது. பணத்துக்கும் பரிசுக்கும் ஆசைப்பட்டு அதில் மக்கள் பங்கேற்கின்றனர். அதிக இட்லி சாப்பிடுவது, அதிக புரோட்டா சாப்பிடுவது, அதிக முட்டை சாப்பிடுவது, அதிக பிரியாணி சாப்பிடுவது, குறைந்த நேரத்தில் அதிகம் சாப்பிடுவது என போட்டிகளை விதம் விதமாக நடத்துகின்றனர்.

இட்லி சிக்கி பலி

அப்படிப்பட்ட ஒரு போட்டி தான் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோட்டில் நடந்தது. ஓணம் பண்டிகையையொட்டி, பாலக்காட்டில் கொல்லப்புரா இளைஞர்கள் குழு சாப்பாடு போட்டி ஒன்றை ஏற்பாடு செய்து இருந்தது. அதிகமான இட்லி சாப்பிடுவோருக்கு பரிசு வழங்கப்படும் என போட்டியை நடத்தும் குழுவினர் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.

இதில் பங்கேற்ற பாலக்காடு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சுரேஷ், அவசர அவசரமாக இட்லியை சாப்பிட்டுள்ளார். அப்போது அவரது தொண்டையில் இட்லி சிக்கியது. போராடியும் இட்லியை விழுங்க முடியவில்லை. மூச்சுத்திணறல் ஏற்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தார்.

இது குறித்து அங்குள்ளவர்கள் கூறியதாவது: சுரேஷ் ஒரேநேரத்தில் மூன்று இட்லிகளை ஒன்றாக விழுங்க முயன்றார். அப்போது இட்லி தொண்டையில் சிக்கியது.

மூச்சுவிட முடியாமல் திணறினார். உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கிருந்து வாளையாறில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதித்த டாக்டர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இத்தகைய போட்டிகளை நடத்துவோர் மீதும், அதற்கு அனுமதி கொடுக்கும் அதிகாரிகள் மீதும் கடுமையான குற்றப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *