சென்னை, பிப்.26 –
ஓடும் ரெயிலில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடமிருந்த 2 பவுன் தங்கநகைகளை யாரோ திருடிக் கொண்டு போய்விட்டார்கள்.
நெல்லூரைச் சேர்ந்தவர் சங்கீதா வயது 38. இவர் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுத் திருமணவிழாவில் கலந்து கொள்வதற்காக பினாங்கினி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்துகொண்டிருந்தார் . இரவு தூங்குவதற்கு முன்பு தனது கைப்பையை தலைமாட்டில் வைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார். இன்று காலையில் அந்த ரெயில் சென்னை சென்டிரலில் வந்து நின்றது. சங்கீதா எழுந்து பார்த்தபோது அவரது கைப்பையைக் காணவில்லை. அப்பைக்குள் அவர் 1 பவுன் தங்கச் சங்கிலி, அரைப்பவுன் மோதிரம் , அரைப்பவுன் கம்மல்கள் ஆகியவற்றை வைத்திருந்தார். இதுகுறித்து அவர் சென்டிரல் ரெயில்வே போலீசில் புகார் கூறினார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.