செய்திகள்

ஓசூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பல்பரிசோதனை

ஓசூர் சீதாராம் நகரில் உள்ள நராட்சி அரசு நடுநிலை பள்ளியில் மாணவர்களுக்கு இலவச பல்பரிசோதனை செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சீதாராம் நகர் பகுதியில் அரசு நடுநிலை பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 400 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர்.

இந்த மாணவ, மாணவியர்களுக்கு ஆல் வெல்ஸ் கிளினிக் நிறுவனர் சசி குமார், ஜெய்பீம் நகர அமைப்பாளர் சந்தோஷ் மற்றும் சீதாராம் நகரை சேர்ந்த டேனியல் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து பல் பரிசோதனை முகாமினை நடத்தினர்.

முகாமில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவர்களுக்கும் இலவசமாக பல் பரிசோதனை செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *