செய்திகள்

ஒளி தந்து வாழ்வு மேம்பட உதவும் சூரியனுக்கு பழமையான வழிபாடு

சூரிய வழிபாடும் ஏதோ இந்தக் கால வழிமுறை என நினைப்பது தவறு. இதிகாச, புராண காலங்களுக்கு முன்பே சூரிய வழிபாடு இருந்திருக் கிறது. ரிக்வேத காலத்தில் இந்த வழக்கம் உண்டு என புராணங்கள் கூறுகின்றன. மேலும் ரிக் வேதத்தில் சூரியன் அக்கால முனிதம்பதிகளான காஸ்யபர்- அதிதியின் புதல்வன் எனக் கூறுகிறது.

சூரியன் காலதேவன் என்றும், எமன் காலன் என்றும் அழைக்கப் படுகிறார்கள். உலகத்து ஜீவராசிகள் வாழ்நாள் காலத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் இந்த காலனை சூரியனின் பிள்ளை என்றும் புராணங்கள் கூறுகிறது. விடியல் வேளையில் உதிக்கும் சூரியன் ஒளிதந்து அன்றாட வாழ்வு தொடர உதவுகிறான். மேற்கே மறைய இருளில் தட்டுத்தடுமாற வேண்டியது இருப்பதையும் காண்கின்றோம். நம்மை வழி நடத்துவது ஒளிதான். அந்த ஒளிக்கு தரும் நன்றியே ஞாயிறை போற்றுதல்.

நம்மூதாதையர் வார நாட்களுக்கு கிரகங்களின் பெயரை சூட்டும் போது முதலாய் சூரியனை முன் நிறுத்தி ஞாயிறு என்று வைத்து, பிரகாசமாய் துவங்க வைத்தனர். உயிர் வாழ உணவு அவசியம். ஆதவன் தன் பொற்கரங்களால் அள்ளித்தரும் கருணை கொடையே அரிசி. அந்த அருட்கொடைக்கு நன்றி சொல்லி, ஒன்று கூடி கொண்டாடவே பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அந்தக் கால தமிழர்களின் நாகரீக பண்பாடு, பொங்கல் திருநாள் வைபவம் தமிழர்கள் வாழ்வு முறைக்கும் அவர்களின் பழம் பெருமைக்கும் எடுத்துக்காட்டவே இத்திருநாள்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்களே, அது ஏன்? பொங்கல் கொண்டாடுவதில் சூரியனுக்கு விசேஷ பிரார்த்தனைகள்? காரணம் இல்லாமல் தமிழர்கள் ஆதிகாலம் தொட்டு செய்வதில்லை. சூரிய வழிபாடு இதிகாச, புராண காலங்களிலும் இருந்ததற்கு ஆதாரங்கள் பல உண்டு.

கலிலியோ என்ற விஞ்ஞானி 300 ஆண்டுகளுக்கு முன்பு சூரியனை பூமி உட்பட கிரகங்கள் சுற்றி வருவதாக அறிவித்த பிறகே உலகம் ஒத்துக் கொண்டது. ஆனால், விஞ்ஞானபூர்வமாக 3000 ஆண்டுகளுக்கு முந்தைய கோவில்கள் என சொல்லப்படும் பல கோவில்கள், மீனாட்சியம்மன் கோவில் உட்பட அனைத்திலும் சூரியன் நடுவே இருக்க சுற்றி நவக்கிரகங்கள் இருப்பதை பார்க்கும்போது, அன்றே நம் முன்னோர்களுக்கு தெரிந்ததைத் தான் பிற்காலத்தில் துல்லியமாக விஞ்ஞான பூர்வமாக கலிலியோ சொல்கிறார் என்பது தெரிகிறது.

எந்த பழங்கால கோவிலிலும் உள்ள சூரியனை சுற்றி உள்ள கிரகங்களின் நிலையை ஏன் என்று கேட்டு அதன் விஞ்ஞான தாத்பரியத்தை மறந்ததால், இப்போது நாமும் பள்ளிகளில் கலிலியோ கண்டுபிடித்தார் உலகம் சூரியனை சுற்றுகிறது என்று. நம் இதிகாச, புராண தத்துவங் களை மறந்து செயல்பட்டால், விளைவு நாம் பின்தங்கி விடுவோம்.

அதேபோல சூரிய வழிபாடும் ஏதோ இந்தக் கால வழிமுறை என நினைப்பது தவறு. இதிகாச, புராண காலங்களுக்கு முன்பே சூரிய வழிபாடு இருந்திருக் கிறது. ரிக்வேத காலத்தில் இந்த வழக்கம் உண்டு என புராணங்கள் கூறுகின்றன. மேலும் ரிக் வேதத்தில் சூரியன் அக்கால முனிதம்பதிகளான காஸ்யபர்- அதிதியின் புதல்வன் எனக் கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *