செய்திகள்

ஒரே மேடையில் 100 நூல்களை வெளியிடும் முயற்சியில் பெண் முனைவர் மரியதெரசா

* ஹைக்கூ *லிமரைக்கூ * சிறுகதை *மரபுக் கவிதை

ஒரே மேடையில் 100 நூல்களை வெளியிடும் முயற்சியில் பெண் முனைவர் மரியதெரசா

சென்னை, செப்.16

கொரோனா முடிவுக்கு வந்த பின், ஒரே மேடையில் தான் எழுதிய 100 நூல்களை வெளியிடவிருக்கிறார் பெண் தமிழறிஞர் முனைவர் மரிய தெரசா.

டாக்டர் மரிய தெரசா காரைக்காலில் பிறந்தவர். தமிழ் எம்ஏ, பிஎச்டி., இந்தியில் சாகித்திய ரத்னா, பாராங்கத், ஷிக்ஷா விஷாரத், பிரச்சாரக், ஆங்கிலம் எம்.ஏ. பட்டம் பெற்றவர். இவரது நூலை 18 பேர் ஆய்வு செய்துள்ளனர். எழுத்துப் பணிக்காக இவர் இதுவரை 131 விருதுகளை பெற்றுள்ளார்.

மலேசியா, தாய்லாந்து, அந்தமான், துபாய், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, விசாகப்பட்டினம், மும்பை, திருப்பூர், சென்னை இப்படி பல இடங்களில் நடந்த பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்று உரையாற்றி இருக்கிறார்.

‘‘1998ல் ‘‘நிழல் தேடும் மரங்கள்’’ என்ற புதுக்கவிதை நூலுடன் எனது இலக்கியப் பயணம் ஆரம்பித்தது. தொடர்ந்து புதுக்கவிதையில் கால் ஊன்றியிருந்த நான், படிப்படியாக ஹைக்கூ, லிமரைக்கூ, சிறுகதைகள் மரபு கவிதைகள் என உயர்ந்தேன்.

1998ல் 100 நூல்களை வெளியிட்டு என் பெயரை இலக்கியத்தில் தக்கவைத்துக் கொண்டேன். 4.3.18 அன்று ஒரே மேடையில் 40 நூல்களை அமைச்சர் பாண்டியராஜன் தலைமையில் வெளியிட்டு அனைவரின் பாராட்டுகளையும் பெற்றேன்.

கடந்த மார்ச் 25ந் தேதி அன்று மேலும் 50 நூல்களை ஒரே மேடையில் வெளியிடத் திட்டமிட்டு இருந்தேன். கொரோனா வைரஸ் காலகட்டம். இந்நிலையில் அந்த 50 நூல்கள் குட்டிப் போட்டு இப்போது, மொத்தம் 100 நூல்கள் ஆகிவிட்டது. நான் விரைவில் ஒரே மேடையில் இந்த நூல்களை வெளியிட உள்ளேன். இதில் புதுக்கவிதை மரபுக் கவிதைகள், குறள்கூ, ஹைக்கூ, லிமரைக்கூ, மோனைக்கூ, சென்ரியு, முரண்கூ, போதனைகூ, தன்முனை கவிதைகள், குறும்பா, சிறுகதைகள், மொழியாக்கம், கட்டுரை, ஆன்மீகம், சிறுவர்களுக்கான கதைகள்… என 24 வகைகள் அடங்கும்.

இது எப்படி சாத்தியம்? என்பது எனக்கே புலப்படாத ஒன்றாக இருக்கிறது. இது இறை அருளைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்று சொல்வேன்.

ஒரு வரிக் கவிதை நூல் ஒன்றும் குறள் நூல் ஒன்றும் மூவரி 39 நூல்களும், 4 வரி தன்முனைக் கவிதை 12 நூல்களும் 5வரி குறும்பா நூலும், அறுசீர் விருத்தம் 2 நூல்களும் எழுசீர் விருத்தம் 1 நூலும், எண்சீர் விருத்தம் 2 நூலும்… இப்படி 100 நூல்கள் வெளியிடப்படும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 100 நூல்கள் பற்றிய விவரத்தை அவர் வெளியிட்டார். 100 புத்தகங்களையும் மலர்க்கண்ணன் பதிப்பகம் வெளியிடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *