செய்திகள்

ஒரே மாதத்தில் 2 சூப்பர் மூன்கள் தோன்றும் அரிய நிகழ்வு: இன்று நள்ளிரவில் ‘முதல் சூப்பர் மூன் ‘

அடுத்த நிகழ்வுக்கு 10 ஆண்டு காத்திருக்க வேண்டும்

சென்னை, ஆக. 1–

அரிய வானியல் நிகழ்வுகளில் ஒன்றான ஒரே மாதத்தில் 2 சூப்பர் மூன்கள், தோன்றுவது இம்மாதத்தில் நிகழ உள்ள நிலையில், இன்று நள்ளிரவில், முதல் சூப்பர் மூனை காண உலக மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

அரிதான வானியல் நிகழ்வுகளில் ஒன்றான ஒரே மாதத்தில் 2 சூப்பர் மூன்கள், தோன்றுவது இம்மாதத்தில் நிகழ உள்ளது. இதில் முதல் சூப்பர் மூன், இன்று நள்ளிரவு வானில் தோன்ற உள்ளது. முழு நிலவு நாட்களில் நிலா காட்சியளிக்கும் அளவை விட 8 மடங்கு அளவில் பெரியதாக காட்சியளிப்பதே சூப்பர் மூன் என்று அழைக்கப்படுகிறது. பூமிக்கு சற்று நெருக்கமாக முழு நிலவு காட்சி அளிக்கும் சூப்பர் மூன் நிகழ்வு, ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட மாதங்களில் நிகழ்கிறது.

10 ஆண்டு காத்திருக்க வேண்டும்

ஆனால், நடப்பாண்டு ஒரே மாதத்தில் 2 சூப்பர் மூன்கள் காட்சி தர உள்ளது அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதன்படி, இன்று நள்ளிரவு முதல் சூப்பர் மூனும், 30ம் தேதி 2வது சூப்பர் மூனும் தோன்ற உள்ளது. பொதுவாக ஒரே மாதத்தில் தோன்றும் 2வது சூப்பர் மூனை ப்ளூ மூன் என அழைக்கின்றனர்.

இந்நிலையில், பொதுமக்கள் அடுத்த சூப்பர் மூன், புளூ மூன் நிகழ்வுகளை காண 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். 2032ம் ஆண்டில் தான் அடுத்த சூப்பர் மூன், புளு மூன் நிகழ்வுகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் சூப்பர் மூனை காண உலக மக்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *