செய்திகள்

ஒரே கட்டமாக தேர்தல் நடத்த மம்தா கோரிக்கை: தேர்தல் ஆணையம் நிராகரிப்பு

கொல்கத்தா, ஏப். 16–

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 4 கட்டத் தேர்தல்கள் நிறைவடைந்த நிலையில், மீதமுள்ள 159 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்ற மம்தாவின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 135 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. எஞ்சிய 159 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. 5-ம் கட்டமாக ஏப்ரல் 17-ம் தேதி 45 தொகுதிகளுக்கும், 6-ம் கட்டமாக ஏப்ரல் 22-ம் தேதி 43 தொகுதிகளுக்கும், 7-ம் கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 36 தொகுதிகளுக்கும் , 8-ம் கட்டமாக 35 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29-ம் தேதியும் வாக்குப்பதிவு நடக்கிறது.

ஆணையம் மறுப்பு

தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் முடிவுகள் 4 மாநிலங்களோடு சேர்த்து மேற்கு வங்கத்திற்கும் வரும் மே 2 ந்தேதி எண்ணப்பட இருக்கிறது. இந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், எஞ்சிய 4 கட்ட தேர்தலையும் ஒரே நாளில் நடத்த வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், மம்தா பானர்ஜியின் கோரிக்கையை ஏற்பதற்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை என்று கூறிய தேர்தல் ஆணையம், தேர்தலில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை இன்று கூட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *