செய்திகள்

ஒரு செல் போனிலிருந்து மற்றொரு போனுக்கு சார்ஜ் செய்யும் வசதியுடன் விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

சென்னை, ஏப்.12–

விவோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ஒய் 21ஜி ஸ்மார்ட் போனில் இருந்து மற்றொரு போனுக்கு சார்ஜ் செய்யும் வசதி உள்ளது. இதன் விலை ரூ.14 ஆயிரம் ஆகும்.

இந்த போன் மல்டி டர்போ வேகத்துடன் இயங்குகிறது. இதனால் இதில் உள்ள கணினி செயலி வேகத்தை இதில் உள்ள அல்ட்ரா கேம் வசதி உணர்வுப்பூர்வமான, விரைவான வீடியோ விளையாட்டு அனுபவத்தை வழங்குகிறது. இதில் நினைவாற்றல் திறனை நீட்டித்துக் கொள்ளும் வசதி உள்ளது.

இந்த நவீன ரக செல்போனில் 13 எம்பி முன் பக்க கேமரா மற்றும் அத்துடன் 2 எம்பி சூப்பர் மேக்ரோ கேமரா கொண்டுள்ளது. சிறந்த புகைப்படம் எடுப்பதற்காக இதில் பல்வேறு சிறப்பு வசதிகள் உள்ளன. குறிப்பாக இரவு நேரத்தில் தெளிவாக பிரகாசமாக படம் படிக்க ஏதுவாக செயற்கை நுண்ணறிவுடன் கூடிய 8 எம்பி செல்ஃபி கேமரா உள்ளது.

இந்த செல்போன் 8 மில்லி மீட்டர் தடிமன் மற்றும் தட்டையான பிரேம் ஆகியவற்றுடன் 182 கிராம் எடையில் விற்பனைக்கு வந்துள்ளது. பாதுகாப்பிற்காக இந்த போனில் கைரேகை சென்சார் மற்றும் விரைவாக ஓபன் செய்வதற்கு முக அடையாள சென்சர் உள்ளது என்று விவோ இந்திய இயக்குனர் யோகேந்திர ஸ்ரீராமுலு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.