சென்னை, ஜன. 17–
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ரூ.59 ஆயிரத்து 600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது.
இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்தில் காணப்பட்டது. கடந்த 3-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிரடியாக உயர்ந்த நிலையில், மறுநாள் ரூ.360 குறைந்தது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்த நிலையில், இன்று மேலும் அதிரடியாக அதிகரித்துள்ளது.
இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது. ஒரு சவரன் ரூ. 59,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, ரூ.7,450க்கு விற்பனை ஆகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.104-க்கு விற்பனை செய்யப்படுகிறது.