சென்னை, டிச. 31–
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.41,040 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டு வருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த வாரத்தில் அதிகபட்சமாக டிசம்பர் 12 ந் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.40,360-க்கும், டிசம்பர் 14 ந் தேதி ஒரு சவரன் ரூ.40,800 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. பின்னர், 16 ந் தேதி ஒரு சவரன் ரூ.40,360 ஆக குறைந்து விற்பனை செய்யப்பட்டது. பிறகு கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சவரனுக்கு ரூ.120 உயர்வு
இந்நிலையில், இந்த ஆண்டின் கடைசி நாளான இன்று, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,130 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.41,040 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.20 காசுகள் குறைந்து ரூ.74.30 ஆகவும், ஒரு கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.74,300 ஆக விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ரூ.41 ஆயிரத்தை கடந்துள்ளது தங்கம் வாங்குவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.