வாழ்வியல்

ஒரு சர்க்கரை துணுக்கில் ஒரு திரைப்படத்தை சேமிக்கலாம்: டி.என்.ஏ-யில் தரவுகளை சேமிக்கும் ஆய்வில் முன்னேற்றம்


அறிவியல் அறிவோம்


தகவல்களை டி.என்.ஏ. மூலக்கூறுகளாகச் சேகரித்து வைக்கும் முயற்சியில் முக்கியமான முன்னேற்றம் அடைந்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறியிருகின்றனர், இது மற்ற முறைகளைவிட அளவில் மிகச்சிறியதும் நீண்ட காலம் நீடிப்பது ஆகும்.

டி.என்.ஏ வடிவில் தகவல்களை சேகரித்தால் ஒரு சர்க்கரை துணுக்கு அளவு இடத்தில் ஒரு திரைப்படத்தை சேமித்துவிடலாம்.

நாம் தற்போது தகவல்களை சேமிக்க பயன்படுத்தும் மேக்னட்டிக் ஹார்ட் டிரைவ்கள் அதிக இடத்தைப் பிடிப்பவை. அதனால் அவை காலப்போக்கில் மாற்றப்பட வேண்டும்.

வாழ்க்கைக்கு விருப்பமான தகவல் சேமிப்பு (டி.என்.ஏ) முறையைப் பயன்படுத்தி, நமது விலை மதிப்பில்லாத தகவல்களைச் சேமித்தால், மிகப்பெரும் அளவிலான தகவல்களை மிக நுண்ணிய மூலக்கூறுகளில் சேமித்து வைக்க உதவும்.

இம்முறையில் தகவல்கள் பல ஆயிரம் ஆண்டுகள் தாக்குப்பிடிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இத்தொழில்நுட்பம், தனித்துவமான டி.என்.ஏ. இழைகளை, அவற்றின் தனித்தனி பகுதிகளிலிருந்து வளர்ப்பதின்மூலம் செயல்படுகிறது. இந்தத் தனித்தனிப் பகுதிகள் ‘பேஸ்கள்’ (bases) என்றழைக்கப்படுகின்றன — இவை டி.என்.ஏ. மூலக்கூற்றினை உண்டாக்கும் நான்கு வெவ்வேறு ரசாயனக் கூறுகளாகும். பைனரி குறியீடுகளை ஒத்தது

இதன் பிறகு, ‘டி.என்.ஏ. எழுத்துகள்’ (டி.என்.ஏ. letters) என்றும் அழைக்கப்படும் இந்த பேஸ்கள், தகவல்களைக் குறியீடுகளாகச் சேகரித்து வைக்கப் பயன்படுத்தப்படலாம், ஒரு வகையில் இது சம்பிரதயமான கணினியியலில் தகவல்களைச் சுமக்கும் ஒன்று – பூஜ்ஜியங்களின் தொடர்களை (binary code – strings of 1s and 0s) ஒத்தது.பல டிஎன்ஏ இழைகளை இணையாக வளர்ப்பதற்கு மைக்ரோ சிப் பயன்படுத்தப்படும்.

Leave a Reply

Your email address will not be published.