செய்திகள் வர்த்தகம்

ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.50 தள்ளுபடி: ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் அறிவிப்பு

சென்னை, ஏப்.9–

ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.50 தள்ளுபடி மற்றும் வெள்ளி பொருட்களின் செய்கூலியில் 25% குறைவாகப் பெறலாம் என ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்று 1964ஆம் ஆண்டில் இருந்து பிரதானமாக விளங்கும் நிறுவனம் ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ். இன்று உலகமெங்கும் 50 ஷோரூம்களாக வானளவு உயர்ந்து நிற்கிறது. மேலும் 50 ஆண்டுகள் கடந்தும் புத்தம் புது டிசைன்களில் தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ராசிக் கற்கள் உள்ளிட்ட அனைத்து வித நகைகளை அனைத்து வயதினரின் விருப்பத்திற்கு ஏற்ப வழங்கி வருகிறது. தலைமுறை, தலைமுறையாக நவீன மற்றும் பாரம்பரிய நகைகளை வழங்கி வருகிறது.

தமிழ் புத்தாண்டு திருநாள் செழிப்பின் அடையாளம் ஆகும். இது பழையனவற்றின் முடிவையும் புதியவற்றின் தொடக்கத்தையும் குறிக்கிறது. இந்த புத்தாண்டை இன்னும் சிறப்பாகக் கொண்டாட ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் அசத்தலான சலுகைகளை வழங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.50 குறைவாகவும் மற்றும் வெள்ளி பொருட்களின் செய்கூலியில் 25% குறைவாகவும் பெறலாம்.

இதுகுறித்து ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் ஜி.ஆர். ‘அனந்த்’ அனந்தபத்மநாபன், ‘தமிழ் புத்தாண்டு போன்ற பண்டிகை தருணங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை நாங்கள் அறிவோம். எனவே வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த திருவிழாவைக் கொண்டாடுவதை இன்னும் எளிதாக்குவதற்கு எங்களிடம் சிறப்பான சலுகைகள் மற்றும் கண்கவரும் லேட்டஸ்ட் டிசைன்களும் உள்ளன. எல்லோரும் நிச்சயமாக விரும்பும் வகையில் எங்கள் பொன் புத்தாண்டு கலெக்ஷன்கள் இருக்கும்’ என்று குறிப்பிட்டார்.

மேலும் ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன், ‘எங்கள் வாடிக்கையாளர்களின் நகை தேவைகளைப் பூர்த்தி செய்வதே எங்கள் நோக்கம். வாடிக்கையாளர்களின் ரசனையை அறிந்து அதற்கேற்ப பல புதுமையான கலெக்சன்களை அறிமுகப்படுத்தி உள்ளோம். அவற்றைப் போலவே அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ள பொன் புத்தாண்டு சலுகைகள் அனைவருக்கும் பிடிக்கும் என நாங்கள் நம்புகிறோம்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *