செய்திகள்

ஒமிக்ரான் மாறுபாட்டுக்கு எதிராக ஸ்புட்னிக்–வி வலுவான பாதுகாப்பு

மாஸ்கோ, மே 26–

கொரோனாவின் ஒமிக்ரான் மாறுபாட்டுக்கு எதிராக ஸ்புட்னிக்–வி வலுவான பாதுகாப்பை அளிப்பதாக கமலேயா தேசிய தொற்று நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் மையம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக்–வி தடுப்பூசி போடப்பட்ட 74.2 சதவிகிதம் பேருக்கு, ஒமிக்ரான் தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடிசை வெளிப்படுத்தின என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஃபைசர் தடுப்பூசி ஓமிக்ரானுக்கு எதிராக 56.9 சதவிகிதம் மட்டுமே ஆன்டிபாடிசை வெளிப்படுத்தியது.

ஆன்டிபாடி அதிகரிப்பு

ஸ்புட்னிக் வி அதிக அளவிலான பாதுகாப்போடு தொடர்புடைய வலுவான ஆன்டிபாடியை தூண்டுவதன் மூலம் ஒமிக்ரான் மாறுபாட்டுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது என்பதை இந்த ஆய்வு நிரூபிக்கிறது.

வேகமாகப் பரவும் ஒமிக்ரான் துணை வகைகளான BA.4 மற்றும் BA.5 ஆகியவை தற்போது அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா மற்றும் 70 பிற நாடுகளில் பரவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் உலகளாவிய பூஸ்டர் தடுப்பூசிகளாகும். 4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 71 நாடுகளில் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.