சிறுகதை

ஒப்புக்கு – ராஜா செல்லமுத்து

லட்சுமண் வீட்டுக்குச் சென்றான் குரு. குருவை உணர்ச்சியுடன் வீட்டிற்குள் வரவேற்றான் லட்சுமண்

வடகிழக்குப் பருவமழை வெளுத்து வாங்கும் அந்த மாதத்தில் லக்ஷ்மன் வீட்டிற்கு சென்ற குருவிற்கு தண்ணி, பழரசம் காபி எதுவும் கொடுக்கவில்லை.

மாறாக வீட்டில் யாரும் இல்லை என்பதை காரணம் சொல்லிய லட்சுமன் எதுவும் கொடுக்காமல் வீட்டிற்கு வந்த குருவிற்கு ஏதாவது சாப்பிட வேண்டுமென்று ஒற்றை வார்த்தையில் கேட்டான் லட்சுமண்,

உடைக்காத பிஸ்கட் மிக்சர் பொட்டலங்களை எடுத்து வந்தான் லஷ்மண்.

அந்தப் பொட்டலங்களை பிரித்து வைக்கவில்லை. வேலை விஷயமாக பேசிக்கொண்டு இருந்தானே ஒழிய அந்த பொட்டலத்தை அவன் பிரித்து வைக்கவில்லை .

இது குருவிற்கு ஒரு மாதிரியாக இருந்தது.

என்ன இது ? சாப்பிட கொண்டு வந்த பொருளை ஓபன் பண்ணாம வச்சிருக்கான். இது எந்த வகையில் நியாயம் ? இது தப்பு என்று நினைத்தான் குரு

ஆனால் லட்சுமண் வேலையில் மும்முரமாக இருப்பது போல் காட்டிக் கொண்டான்.

பிஸ்கட்டையும் ஓபன் செய்யவில்லை.சாப்பிடு என்றும் சொல்லவில்லை.

குருவின் வேலை முடிந்தது. நான் கிளம்பவா? என்ற லட்சுமணிடம் கேட்டபோது,

சரி கிளம்பு என்று தலையாட்டினான் லட்சுமன்.

குரு வெளியில் போகும் போது லட்சுமண் எடுத்து வந்த அந்த இரண்டு பொட்டலங்களும் அவிழ்க்கப்படாமலே இருந்தது.

அடப்பாவி நீயெல்லாம் ஒரு மனுசனா? கொண்டு வந்து சாப்பிட கொடுக்கிற நேர்த்திய பாரு.

காெண்டு வந்த பாெருள உடைச்சு கொடுக்கவும் இல்ல. அத சாப்பிடுன்னு சாெல்லாம பாக்க வச்சிட்டே வேலைய முடிச்சுட்டு வீட்டுக்கு அனுப்பிட்டானே என்று தொண்டை குழிக்குள் உள்ளூர அந்த நெய் பிஸ்கட்டைப் பார்த்துக் கொண்டே சென்றான் குரு .

லட்சுமணன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். நல்ல வேள குரு எந்த ஸ்வீட்டையும் ஒடைக்கல. பாெருள் மிச்சமாச்சு. என்று சந்தாேஷப்பட்டான்.

மறுநாள் லட்சுமணனைப் பார்க்க இருவர் வீட்டிற்கு வந்தார்கள் .

அவர்களை வீட்டிற்குள் அழைத்துப் போன லட்சுமண்

என்ன சாப்பிடுறீங்க? என்று கேட்டுக் கொண்டே, உடைக்காமல் வைத்திருந்த அந்த பிஸ்கட் பாக்கெட், மிச்சர் பாக்கெட்டை உடைக்காமலேயே எடுத்து வைத்தான்.

பிளாஸ்டிக் கவரை உடைக்காமல் சென்ற குருவைப் போல், இவர்களும் இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டான் லட்சுமண்,

ஆனால் வந்தவர்கள் அப்படி இல்லை பாேல

வீட்டுக்குள் சென்று திரும்பி வருவதற்குள் ,அத்தனை பாக்கெட்டுகளையும் உடைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். லட்சுமனுக்கு வேர்த்துக் கொட்டியது.

என்ன இது நம்ம சொல்லாமலே பிளாஸ்டிக் ஒடச்சிட்டாங்க.

குரு மாதிரி மத்தவங்க இருக்க மாட்டாங்க போல என்று லட்சுமண் நினைப்பதற்குள் வந்தவர்கள் ஸ்வீட்டை வழியாக தின்று முடித்திருந்தார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *