துரித மீட்பு பணிகளுக்கு பாராட்டு
புவனேஸ்வர், ஜூன் 4–-
ஒடிசா ரெயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழக பயணிகளுக்கு உதவுவதற்காக மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு ஒடிசா சென்றுள்ளன.
இந்த குழுவினர் அங்கு தமிழக பயணிகளுக்கு மருத்துவம் உள்ளிட்ட இதர உதவிகளை விரைவாக வழங்கி வருகின்றனர்.
இந்த பணிகளுக்கு இடையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து பேசினார். அப்போது விபத்து நடந்தவுடனே மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டதற்காக ஒடிசா அரசுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் இந்த பணிகளை துரிதப்படுத்தி மேற்பார்வையிட்டதற்காக நவீன் பட்நாயக்குக்கு நன்றியும் தெரிவித்தார்.