செய்திகள்

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 1,438 தொழிலாளர்கள் சேலம் ரெயில் நிலையத்திலிருந்து அனுப்பி வைப்பு

சேலம், மே 26

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 1,438 பேர், சேலம் ரெயில் நிலையத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

சேலம், கள்ளக்குறிச்சி, திருப்பூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ரெயில் மூலம் ஒடிசா மாநிலத்திற்கு செல்ல வழி அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி சேலம் ரெயில் நிலையத்தில் நடைபெற்றது.

இந்தநிகழ்ச்சிக்கு, கலெக்டர் ராமன் தலைமையேற்று 1,438 புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலமான ஒடிசா மாநிலத்திற்கு செல்ல ரெயில் மூலம் வழி அனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், சேலம் வருவாய் கோட்டாட்சியர் மாறன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தமிழரசன், உதவி ஆட்சியர் (பயிற்சி) வீர் பிரதாப் சிங், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரவணன், உதவி ஆணையர் (கலால்) அம்பாயிரநாதன், மாவட்ட ஊராட்சி செயலர் விஜயலட்சுமி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) நிர்மல்சன், மாநகர நல அலுவலர் பார்த்திபன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *