செய்திகள்

ஒடிசாவை தாக்கும் ‘குலாப்’ புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி, செப். 25–

‘வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும்’ என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று நாளை மாலை ஒடிசா- ஆந்திரா இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் கூறி உள்ளது. தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது.

75 கி.மீ வேகத்தில் காற்று

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் எனவும் இந்த புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு 75 கி.மீ. வேகத்திற்கு மேல் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாகும் புயலுக்கு பாகிஸ்தானால் பரிந்துரைக்கப்பட்ட குலாப் பெயர் வைக்கப்படுகிறது. இந்தியில் குலாப் என்றால் ரோஜா மலர் எனப் பொருள் கூறப்படுகிறது.

இந்த புயலால் அதிகமான சேதாரங்கள் எதுவும் இருக்காது எனவும், கடலோர மாவட்டங்கள், தெலங்கானா, ஆந்திரா, ஒடிஸா மாநிலங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இதன் காரணமாக உள் மாநிலங்களிலும் அதிக அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தப்பகுதிகளில் மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *