செய்திகள்

ஒசாமா பின்லேடன் ஒரு தியாகி: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

இஸ்லாமாபாத், ஜூன் 26–

தீவிரவாதி ஒசாமா பின்லேடன் ஒரு தியாகி என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்து இருக்கிறார். அவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசி இருக்கிறார். அதில், அல்கொய்தா தலைவர் பின்லேடன் பாகிஸ்தானில் கொல்லப்பட்டார். அவர் ஒரு தியாகி. அமெரிக்க ராணுவம் அபோதாபாத் உள்ளே வந்தது. பாகிஸ்தானையே கேட்காமல் அத்துமீறியது. இதனால் ஒசாமா வீரமரணம் அடைந்தார். இதனால் 2 நாட்டு உறவும் மோசமாக பாதிக்கப்பட்டது.
அதன்பின் உலகம் முழுக்க பாகிஸ்தானை எதிர்த்தது. பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகள் கடுமையாக பேசியது. பாகிஸ்தானின் நட்பு நாடாக இருந்த அமெரிக்கா எங்களிடம் அறிவிக்காமல் எங்கள் எல்லைக்குள் வந்து இருக்கிறது.
எங்களிடம் கேட்காமல் எங்களின் நட்பு நாடு ஒன்று எல்லைக்குள் உள்ளே வந்து தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதை நாங்கள் எப்படி எடுத்துக் கொள்வது.

தீவிரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா செயல்பட பாகிஸ்தான் உதவியது. ஆனால் பாகிஸ்தானுக்கு மிஞ்சியது எல்லாம் அவமானம் மற்றும் புறக்கணிப்புதான்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *