செய்திகள் நாடும் நடப்பும்

ஐ.நா. சபையின் சர்வதேச கடல்சார் அமைப்பில் இருந்து ரஷ்யா வெளியேற்றம்

3 மகா சமுத்திரம், 12 கடல்களின் கரை கொண்ட ரஷ்ய நிலப்பரப்பு


ஆர். முத்துக்குமார்


கடந்த வாரம் ஐ.நா.வின் ஓரு அதிமுக்கிய அங்கமான சர்வதேச கடல்சார் அமைப்பில் (International Maritime Organisation – IMO) இருந்து ரஷ்யா வெளியேற்றப்பட்டு இருக்கிறது. இது உலக வர்த்தகத்தில் பல புதுப்புது தலைவலிகளுக்கு வழிவகுக்கலாம்.

உலக அரசியலில் அமெரிக்காவின் வழிகாட்டுதலின் காரணமாக 40 நாடுகள் கொண்ட இந்தக் குழுமத்தின் நிர்வாகக் குழு ரஷ்யாவை வெளியேற்றி இருப்பதற்கு பதிலடி துவங்கினால் உலக அமைதி மேலும் பாதிப்பை சந்திக்கும் அதை தெரிந்தும் இப்படி ஓரு முடிவை ஐ.நா. அமைப்பு இப்படி ஒரு செயலில் ஈடுபட்டு இருக்கிறது.

லண்டனில் தலைமையகம் கொண்டு இயங்கும் இந்த சர்வதேச கடல்சார் அமைப்பு கப்பல் போக்குவரத்தின் வரையறைகளையும் பாதுகாப்பு சமாச்சாரங்களையும் மாசு தூசு கட்டுப்பாடுகளை நிர்மாணிப்பதும் கப்பல் நிர்வாக சிக்கல்களுக்கு தீர்வுகள் தருவதும் என பல முக்கிய முடிவுகள் எடுக்கும் சர்வதேச அமைப்பாகும்.

175 உறுப்பினர்கள் கொண்ட இந்த அமைப்பில் 40 செயற்குழு உறுப்பினர்கள் திடீர் என ரகசிய வாக்கெடுப்பை நடத்தி தனது நீண்டகால உறுப்பு நாடான ரஷ்யாவை நிர்வாக அமைப்பில் இருந்து வெளியேற்றி விட்டது.

அமெரிக்காவின் தூண்டுதலால் பிற உறுப்பினர்கள் தலையாட்டி பொம்மைகளாக மாறி ரஷ்யாவை வெளியேற்றி விட்டது.

இதற்கு ரஷ்யா எப்படிப்பட்ட பதிலடி தரப்போகிறது? என்ற அச்சம் கடல்சார் வணிக துறைக்கும் போக்குவரத்தை நிர்வகிக்கும் பொறுப்புள்ள நிறுவனங்களுக்கும் வந்துள்ளது.

நாட்டோவில் அங்கம் வகிக்க விண்ணப்பித்த உக்ரைனுக்கு நாட்டோ ராணுவ உதவிகள் கிடைத்தால பெரிய தலைவலியாக மாறும் என்ற அச்சத்தினால் ரஷ்யா பல ஆண்டுகளாகவே உக்ரைனுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருவதை அறிவோம்.

நடுநிலையோடு செயல்பட வேண்டிய ஐ.நா. அமைப்பின் பல அங்கங்களில் ரஷ்யாவும் உண்டு. ஆனால் சமீபமாக இதுபோன்ற அமைப்புகள் ரஷ்யா மீது பொருளாதார தடை இருக்கிறது என்று சுட்டிக்காட்டி வருவதுடன் மேலும் ரஷ்யாவை அவ்வமைப்புகள் வெளியேற்றியும் அவமதிப்பை அவர்கள் மீது வீசி வருகிறது.

நம்மை சுற்றி மூன்று பக்கமும் கடல் சூழ, இருக்கும் தேசம் என்பதால் தீபகற்பம் என்று கூறப்படுகிறது. கடல்சார் அரண் என்பதுடன் பல இயற்கை சவால்களும் மீனவர் சிக்கல்களும் சந்தித்து வருகிறோம்!

நமக்கு கடல்சார் விவரங்கள் அறியாதவர்கள் என்று உலக அமைப்பு கூறினால் கோபப்படுவோம் அல்லவா? ரஷியாவோ கடல்சார் விவரங்களின் வல்லரசாகும்!

இயற்கை எரிவாயு வளம் மிக அதிகம் கொண்ட ரஷியா நிலக்கரி கையிருப்பிலும் உலகில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. எண்ணை வளத்தில் உலகின் 8வது பெரிய கையிருப்பு கொண்டதாக அறிவிக்கப்பட்டும் இருக்கிறது.

இதையெல்லாம் கொண்டு அமெரிக்காவை பின் தள்ளி விடுவார்களோ என்ற ஒரே அச்சத்தில் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்தது.

உக்ரைனுக்கு நாட்டோ அங்கீகாரம் தரலாமா? என்ற விவாதத்தை விட உக்ரைனுக்கு நிதி உதவிகள், ராணுவ தளவாடங்களை கை நிறைய தந்து ரஷ்யாவை அழித்திட உத்தரவிட்டது.

ஆனால் கடந்த 20 மாதங்களில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ராணுவ தளவாடங்களை உபயோகித்து முடித்து விட்ட பிறகும் ரஷ்யா நிமிர்ந்து நடைபோட்டுக் கொண்டு இருக்கிறது.

பொருளாதாரத் தளர்ச்சிக் காரணமாக இனி இலவசமாக ஆயுத சப்ளை செய்ய முடியாது என்று உக்ரைனுக்கு கைவிரித்து விட்ட நிலையில் ரஷ்யாவின் வெற்றி உறுதியாக வரும் நிலையில் அமெரிக்க ரஷ்யாவை நிலை கொளைந்து நிற்க வைக்கும் நோக்குடன் கடல்சார் வியூகத்தை அவிழ்த்து வருகிறது.

அதன் முதல் கட்டமாக ரஷ்யாவை சர்வதேச கடல்சார் அமைப்பின் முடிவெடுக்கும் குழுமத்தில் இருந்து வெளியேற்றி விட்டது.

உலகின் மிகப்பெரிய நிலபரப்பு ரஷ்யாவாகும். அதனை சுற்றி மூன்று மகா சமுத்திரங்கள் கரை கொண்டுள்ளது. அட்லாண்டிக், பசபிக் மற்றும் ஆர்டிக் மகா சமுத்திரங்களுடன் 12 கடல்களும் சூழ்ந்தது தான் ரஷ்யா!

ரஷியாவின் நெருங்கிய நண்பன் என்ற நிலையை இந்தியா மட்டுமே பெற்று இருப்பதை அறிவோம். நாம் கப்பல் துறையிலும் சங்கக்காலம் முதலே சாதித்து கடல் கடந்து வாணிகமும் கலாச்சார பரிமாற்றங்களையும் செய்து வருகிறோம்.

ரஷ்யாவுக்கு தேவையான பல பொருட்களை ஏற்றுமதி செய்ய துவங்கி விட்டோம்.

ரஷ்யாவிடம் இருந்து நமது தேவைக்கு வேண்டிய பெட்ரோல், டீசலை கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வாங்கி வருகிறோம்.

இந்த ஏற்பாட்டால், அமெரிக்க டாலரின் சர்வாதிகார போக்கு ஆட்டம் கண்டு வருகிறது. எண்ணை வள நாட்களின் அமைப்பான OPEC –ல் இருந்து கச்சா எண்ணை வாங்கினால் குறைந்த விலை என்ற நிலை மாறி ரஷ்யா இந்தியாவிற்கு சிறப்பு விலையில் ரூபாயிலேயே வாங்கிக் கொள்ளும் வசதியை தந்தது.

இது ரஷ்யாவிற்கு நல்ல பொருளாதார வசதியாக மாறுவதை கண்ட அமெரிக்கா OPEC அமைப்பை மேலும் இந்தியாவிற்கு சாதகமான விலையில் கடந்த மூன்று மாதங்களாக விற்பனை செய்து வருகிறது. அதாவது ரஷ்யாவின் வர்த்தக வருவாயை நிறுத்திட வைத்து விட்டது!

இந்த வரிசையில் ரஷ்யாவை ஜ. நாவின் சர்வதேச கடல்சார் அமைப்பில் இருந்து வெளியேற்றி இருப்பது ரஷ்யாவிற்கு கோபத்தை தர வைத்து விடும் சமாச்சாரமாகும்.

உக்ரைனின் நாட்டோ விண்ணப்பம் காற்றில் பறக்க விட்ட பிறகு அவர்களுக்கு உதவி செய்யத் தயங்கும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவ தனது பார்வையை மாற்றி கொண்டு வருகிறது.

ஆனாலும் ரஷ்யாவை கப்பல் போக்குவரத்து தலைவலிகளில் சிக்க வைத்து அதன் சரக்கு கப்பல்களை நகர்த்த முடியாமல் தவிக்க வைக்க அமெரிக்கா அவிழ்த்து விட்டு இருக்கும் இந்தச் சதியை ரஷ்யா சகித்துக் கொண்டு இருக்கப் போவது கிடையாது.

அவர்களின் எதிர்தாக்குதலில் கப்பல் துறை தத்தளிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *