செய்திகள்

ஐ.சி.சி. டி20 தரவரிசை: முதல் இடத்தை தக்கவைத்தது இந்தியா

துபாய், மே 31–

ஐ.சி.சி. டி20 தரவரிசையில் இந்தியா முதல் இடத்தை தக்கவைத்து கொண்டது.

வெஸ்ட் இண்டீஸ்-தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இங்கிலாந்து-பாகிஸ்தான் இடையிலான 4 டி20 போட்டிகள் கொண்ட தொடர் முடிவடைந்துள்ளன. இதில் வெஸ்ட் இண்டீஸ் 3-0 என்ற கணக்கிலும், இங்கிலாந்து 2-0 என்ற கணக்கிலும் தொடரை கைப்பற்றின.

இந்நிலையில், டி20 போட்டிகளில் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது.

இதில் முதல் 3 இடங்களில் முறையே இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மாற்றமின்றி தொடருகின்றன.இதில் 6-வது இடத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி கிடுகிடுவென முன்னேறி 4-வது இடம்பிடித்துள்ளது. நியூசிலாந்து மாற்றமின்றி 5-வது இடத்தில் தொடருகிறது. பாகிஸ்தான் ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 3-இடம் சரிந்து 7-வது இடத்திலும் உள்ளது. கடைசி 3 இடங்களில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் உள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *