செய்திகள்

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தது

ஜெனீவா, ஜூலை 3–

இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இன்று கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பல்வேறு நாடுகளில் உயிரிழப்பு என்பது வேகமாக குறைந்து வருகிறது.
ஐரோப்பிய நாடுகள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளன. அங்கு கொரோனா கட்டுக்குள் இருக்கிறது. உலகில் கொரோனா தொற்றால் 1 கோடியே 9 லட்சத்து 70 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 61 லட்சத்து 34 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.

உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 5 லட்சத்து 23 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புடன் 43 லட்சத்து 12 ஆயிரத்து 932 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்,
இந்நிலையில் கொரோனா பாதிப்பு ஒரு பக்கம் அதிகரித்தாலும், உயிரிழப்பு ஏற்படுவது கணிசமாக குறைந்து வருகிறது.

அதிகபட்சமாக பிரேசிலில் மட்டுமே ஒரே நாளில் 1277 பேர் பலியாகி உள்ளனர். ஆனால் அமெரிக்காவில் 676 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். 3வது இடத்தில் உள்ள மெக்சிகோவில் 648 பேரும், 4வது இடத்தில் உள்ள இந்தியாவில் 438 பேரும் இறந்துள்ளனர். 5வது இடத்தில் உள்ள ரஷ்யாவில் 216 பேர் இறந்துள்ளனர்.

கொரோனா தொற்று பரவிய போது ஆரம்பத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இன்று கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது. ஐரோப்பிய நாடுகளில் ரஷ்யாவில் 147 பேரும், அதற்கு அடுத்தபடியாக இங்கிலாந்தில் மட்டும் 89 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.
அதேபோல் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு என்பது 20க்கும் கீழ் என்ற நிலையை எட்டி உள்ளது.

ஆசியாவிலேயே கொரோனா பாதிப்பு இந்தியாவில் தான் அதிகமாக உள்ளது. ஒரே நாளில் 21,948 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் உயிரிழப்பு மிக மிக குறைவாக உள்ளது. ஒரே நாளில் 377 பேர் மட்டும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *