செய்திகள்

ஐபில்: ஐதராபாத் – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்

துபாய், செப். 27–

ஐபிஎல் 14வது சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடக்கிறது.

ஐதராபாத் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை தவிர்க்க முடிந்த அளவுக்கு முயற்சிக்கும். வார்னர், கேப்டன் வில்லியம்சன் பார்மில் இல்லாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. இந்த போட்டிக்கான சன்ரைசர்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்படலாம். தொடர்ச்சியாக திணறிவரும் தொடக்க வீரரும் முன்னாள் கேப்டனுமான டேவிட் வார்னர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய் சேர்க்கப்படலாம். அதேபோல கேதர் ஜாதவுக்கு பதிலாக விராட் சிங் அல்லது பிரியம் கர்க் ஆகிய இருவரில் ஒருவர் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4 வெற்றி, 5 தோல்வி என 8 புள்ளிகளுடன் உள்ள ராஜஸ்தான் அணிக்கு இந்த ஆட்டம் முக்கியமானது. இதில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்று வாய்ப்புக்கான நெருக்கடி கொஞ்சம் குறையும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் 2 மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் ஆடாத எவின் லூயிஸ் மற்றும் கிறிஸ் மோரிஸ் ஆகிய இருவரும் சேர்க்கப்படுவார்கள். அதனால் டேவிட் மில்லர் மற்றும் ஷாம்ஸி ஆகிய இருவரும் நீக்கப்படலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *